ஞாயிறு, 24 மே, 2020

தன்னேரிலாத தமிழ் - 71


தன்னேரிலாத தமிழ் - 71

தன்னின் பிறிது இல்லை தெய்வம் நெறி நிற்பில்
ஒன்றானும் தான் நெறி நில்லானேல் தன்னை
இறைவனாச் செய்வானும் தானே தான் தன்னைச்
சிறுவனாச் செய்வானும் தான்,” ---அறநெறிச்சாரம்.

ஒருவன் நல்ல நெறிகளைப் போற்றி ஒழுகுவானாயின் அவனைக் காட்டிலும் சிறந்த தெய்வம் வேறு ஒன்றும் இல்லை. எந்நிலையிலும் அவன் நல்ல நெறிக்கண் நிற்கவில்லை என்றால் அவனைக்காட்டிலும் இழிந்தவனும் இல்லை . எனவே தன்னை மற்றவர்களுக்குத் தலைவனாக ஆக்கிக் கொள்பவனும் அல்லது தாழ்ந்தவனாகச் செய்து கொள்பவனும் அவனேதான் என்பதாம்.

1 கருத்து: