புதன், 20 ஜனவரி, 2021

தன்னேரிலாத தமிழ்-219.

 

தன்னேரிலாத தமிழ்-219.

குன்று மலை காடு நாடு

ஒன்றுபட்டு வழிமொழியக்

கொடிது கடிந்து கோல் திருத்திப்

படுவது உண்டு பகல் ஆற்றி

இனிது உருண்ட சுடர் நேமி

முழுது ஆண்டோர் வழி காவல.”புறநானூறு, 17

குன்றும் மலையும் காடும் நாடும் எனப் பல்வகை நிலப் பகுதிகள்: உடையோர் பலரும் ஒன்றுபட்டு வழிமொழிய,  தீயன போக்கி, கோல் செங்கோலாகவும், உரிய இறைப் பொருளுண்டு நடுநிலையுடன்,  சுடர் விளங்கும் ஆணைச் சக்கரத்தை இனிதாகச் செலுத்தவும் வல்லவராய் வாழ்ந்தோர், நின் (யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை) முன்னோர், அங்ஙனமிருந்து நிலம் முழுதும் ஆண்ட, அன்னவர்தம் மரபினைக் காத்தவனே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக