வியாழன், 21 ஜனவரி, 2021

தன்னேரிலாத தமிழ்-220.

 

தன்னேரிலாத தமிழ்-220.

யார் மகள் என்போய் கூறக் கேள் இனி

குன்றுகண்டு அன்ன நிலைப்பல் போர்பு

நாள்கடா அழித்த நனந்தலைக் குப்பை

வல்வில் இளையர்க்கு அல்குபதம் மாற்றாத்

தொல்குடி மன்னன் மகளே…..”புறநானூறு, 353.

வெல்லும் போரை உடைய அண்ணலே…! ( இம்மன்னன் யாரெனக் குறிப்பில்லை)  யார் மகள் இவள் என்று வினவா நின்றனை ; இனி, யான் கூறக் கேட்பாயாக, மலையைக் கண்டாற் போன்று நிலையினை உடைய பல நெற்போர்களை, நாள்தோறும் காலையில் கடா விட்டு அழித்து, குவித்து வைத்துள்ள நெல்லை, வலிய வில் வீரர்களுக்கு நாள் உணவாகக் கொடுப்பதில், மாற்றம் இல்லாத பழமையான குடிகளை உடைய, மன்னன் மகள் ஆவாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக