வெள்ளி, 4 அக்டோபர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 47. தேவநேயப் பாவாணர்.

 

சான்றோர் வாய் (மை) மொழி : 47. தேவநேயப் பாவாணர்.

                          1966 இல் மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரால் வெளியிடப்பெற்ற 

 “The Primary classical Language of the World “….. என்னும் நூல் உலகமொழிகள் அனைத்திற்கும் செம்மொழியான தமிழே தாய்மொழி ஆகும் தகுதியுடையது என்று  சான்றுகள் பல தந்து அறிவிக்கின்றது.

வியாழன், 3 அக்டோபர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 46 . ஜார்ஜ் ஹார்ட்.

 

சான்றோர் வாய் (மை) மொழி : 46 .  ஜார்ஜ் ஹார்ட்.

The Relationship Between Tamil and Sanskrit

               (தமிழுக்கும் சமசுகிருதத்துக்குமிடையில் நிலவிய உறவு) எனும் நூலில் ஜார்ஜ் ஹார்ட் அவர்கள் ‘ குடும்ப வாழ்க்கை, குழுவின் கூட்டு வாழ்க்கை, உடன்பிறப்புகளின் அன்புப் பிணைப்பு ஆகியவை செவ்வியல் இலக்கியங்களின் அடித்தளமாகவும் உயிர்மூச்சாகவும் அமைகின்றன. வான்மீகி இராமாயாணத்தில் காணப்படும் இத்தகைய மானிட உறவுகள்கூடத் தமிழ் இலக்கியத்தின் தாக்கத்தால் வடமொழியில் இடம் பெற்றவை என்று கருதுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.” எனக் கூறுவது தமிழின் செம்மொழித்தகுதியை விளக்கும் பிறிதொரு சான்றாகும்.