திங்கள், 22 ஜூன், 2026

ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம்:-16. . முத்தமிழ் மூதறிஞர் வ.சுப. மாணிக்கம்.

 ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம்:-16.  

               தொல்காப்பியர் வரலாறு 

        தொல்காப்பியர்-காலம் : 

             முத்தமிழ் மூதறிஞர் வ.சுப. மாணிக்கம். 

         தொல்காப்பியத்தின் காலம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முந்தியது ன்பார்தம் காலக்கொள்கை எனக்கு உடன்பாடு 

        இன்று நம் பேறாகவுள்ள அவையநூல்கள் திருக்குறள், சிலப்பதிகாரம், போன்றவை தொல்காப்பியத்தை நோக்கக் காலப்பிந்தியன. என்றாலும் இந்திய மொழிகளின் வரலாற்றோடும் உலகமொழிகளின் வரலாற்றோடும் ஒப்பிடுங்கால் நம் நூற்செல்வங்கள் தொன்மை சான்றனவே. தொல்காப்பியக் காலக்கல்வி முறைகள் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுவரை உயிரோட்டம் பெற்றிருந்தனவாதலின் தொல்காப்பியவுரை காண்பதற்கு இத்தொன்னூல்கள் பெருவிழுக்காடு நற்றுணையாவனவே. முற்கால மரபுணர்ச்சியும் மரபுப்பற்றும் சில நூற்றாண்டுவரை தொடர்ந்து வந்தமையின், இடைக்காலத்தும் தொல்காப்பியக் கல்வி மரபு தொல்லாணை நல்லாசிரியர்கள்பால் தழைத்திருந்தது. அதனாலன்றோ கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டிற்குப்பின் தொல்காப்பியம் இலக்கணவுலகிலும் உரையுலகிலும் தணியாப் புத்துயிர் பெற்றது. இலக்கண விளக்கம், இலக்கணக்கொத்து வரையில் தொல்காப்பிய வூற்றுக்கண்களைக் காண்கிறோம். தொல்காப்பியம் சென்ற நூற்றாண்டிலிருந்து மீண்டும்  தமிழகத்தின் தாய் நூலாகவும் உலகப்பண்மொழியரங்கில் ஒப்புயர்வற்ற பொது மொழியியல் நூலாகவும் அறிவொளி வீசுகின்றது. 

 ொல்காப்பியர் காலத்து வடமொழிவரவும் உண்டு. அயல் நாகரிக வரவும் உண்டு . இவ தொடக்கவருகையாகும். ஒப்புமை சுட்டும் பாங்கில் இவை மிகச் சிறுவரவின. அன்று ஆரியச் சூழ்நிலையும் ஆரியத் தாக்கமும் அவ்வளவாக இல்லை. ஆதலின் ஆரியக் கருத்துத் தோன்ற நூற்பாக்கட்கு உரையெழுதல் பொருத்தமன்று. தமிழ் நெஞ்சங்கொண்டு தமிழ் வழியாகவே தொல்காப்பியத்துக்கு உரையும் விளக்கமும் காணல் எழுத்து நெறியாகும்.  

தொல்காப்பியத்து இடைச்செருகலான சில நூற்பாக்கள் உள என்ற கருத்து எனக்கு உடன்பாடன்று. சிறியவளவு பாட பேதங்கள் உண்டு. 

 தொல்காப்பியம் யாத்த தொல்காப்பியர் இருவர் ஆவர் என்ற மருட்கொள்கை ஆய்வுக்களத்துக்கே வரத்தக்கதன்று. இது இல் பொருள் என் 

            தமிழுக்கும் தமிழினத்துக்கும் வளமையான உயர்ந்த புதிய எதிர்கால வாழ்வு தொல்காப்பியத்தைப் போற்றும் அரசாலும் தொல்காப்பியப் பற்றிடைய மக்களாலும் தொல்காப்பியவறிவுடைய இளைஞர்களாலும் தொல்காப்பிய உணர்வுடைய எழுத்தாளர்களாலும்  உண்டாகும் என்பது என் நம்பிக்கை. இதுவே இவ்வுரை எழுதுவதன் நோக்கம்.  

...................................தொடரும்...............................  

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக