செவ்வாய், 18 ஆகஸ்ட், 2026

ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியர்:-70...- முனைவர் ச.வே. சுப்பிரமணியன்.

 ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியர்:-70- ஓர் அறிவியல் அறிஞர்  

                        எழுத்துக்களது பிறப்பு :

தெளி்வுரை ; முனைவர் ச.வே. சுப்பிரமணியன்.  

டகாரகாரம் நுனிநா அண்ணம்.”-91.  

னி நா நுனி அண்ணத்தைப் பொருந்த ட, ண பிறக்கும். 

 அவ்வாறெழுத்தும் மூவகைப் பிறப்பின.”- 92.  

மேற்கூறிய ஆறு எழுத்துக்களும் மூவகையான பிறப்பை யுடையன.  

 “அண்ணம் நண்ணிய பல் முதல் மருங்கின்   

நா நுனி பரந்து மெய்யுற ஒற்றத்    

தாம் இனிது பிறக்கும் தகார நகாரம்,”- 93.  

மேல் அண்ணத்தில் நெருங்கிய மேற்பல்லின் அடிப்பக்கத்தில் நாவின் நுனி பரந்து நன்கு அழுத்த த, ந, இரண்டும் பிறக்கும். 

 “அணரி நுனி நா அண்ணம் ஒற்ற    

றஃகான் ்னஃகான் ஆயிரண்டும் பிறக்கும்.” - 94. 

 
 நுனிநா அண்ணாந்து அண்ணத்தைச் சென்று ஒற்ற ற, ்ன, ஆகிய இரண்டும் பிறக்கும்.  

நுனி நா அணரி அண்ணம் வருட   

ரகாரம் ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும்.” -95.  

நுனிநா அண்ணாந்து அண்ணத்தைத் தடவ ர, ழ, இரண்டும் பிறக்கும்.  

நா விளிம்பு வீங்கி அண்பல் முதலுற    

ஆவயின் அண்ணம் ஒற்றவும் வருடவும்   

லகார ளாகரம் ஆயிரண்டும் பிறக்கும்.” - 96.  

நாவினது விளிம்பு தடித்து மேற்பல்லின் அடியைப் பொருந்துங்கால் அவ்விடத்தே அண்ணத்தை ஒற்ற வும் வருட வும் பிறக்கும்.  

 “ இதழ் இயைந்து பிறக்கும் பகார மகாரம்.” - 97. 

 மேல் உதடும் கீழ் உதடும் சேரப் பிறக்கும் ப, ம,  

 “பல் இதழ் இயைய வகாரம் பிறக்கும்,”- 98.  

மேல் பல் கீழ் இதழோடு சேர , பிறக்கும். 

 .............................தொடரும்......................................................  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக