வெள்ளி, 6 அக்டோபர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 672

திருக்குறள் – சிறப்புரை : 672
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை. --- ௬௭௨
பொறுமையுடன் செய்யவேண்டிய செயலைப் பொறுமையாகச் செய்ய வேண்டும் ; விரைந்து முடிக்க வேண்டிய செயலைக் காலம் கடத்தாது விரைவாகச் செய்து முடிக்க வேண்டும்.
“செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்.” –குறள்.—466.
ஒருவன். செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான் ; செய்யத்தக்க செயல்களைச் செய்யாமல் விடுவதனாலும் கெடுவான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக