வியாழன், 19 அக்டோபர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 685

திருக்குறள் – சிறப்புரை : 685
தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாம் தூது.--- ௬௮௫
பகையரசரிடம் தூதுரைப்பவன் அரசர் விரும்பிக் கேட்குமாறு சொல்ல வேண்டிய செய்திகளைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் தொகுத்துரைத்தும் கடுகி உரைக்க வேண்டின் கடுஞ்சொற்களை நீக்கி அவர் மனம் மகிழுமாறு இனிய சொற்களால் எடுத்துரைத்தும்  தன் அரசனுக்கு நன்மை பயக்குமாறு கடமையாற்றும் அறிவுடையவனே சிறந்த தூதன் ஆவான்.
”சான்றவர் கேண்மை சிதைவு இன்றாய் ஊன்றி
வலி ஆகிப் பின்னும் பயக்கும்….” –ஐந்திணை எழுபது.

நற்பண்புகள் நிறைந்த பெரியோர் நட்பானது என்றும் நிலைபெற்று அமைவதோடு அடைந்தவர்க்கு வன்மைமிக்க துணையாகி மேலும் பல நன்மைகளை உண்டாக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக