வெள்ளி, 20 அக்டோபர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 686

திருக்குறள் – சிறப்புரை : 686
கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவதாம் தூது.--- ௬௮௬
கருத்தைப் புலப்படுத்தும் நுட்பங்களைக் கற்றுப் பகையரசர் மனம்கொளச் சொல்லவந்த செய்தியைச் சொல்லி; அவர் வெகுண்டு நோக்கின் அந்நோக்கிற்கு அஞ்சாது; கருதிய காலத்தோடு அறியவேண்டியவற்றை அறியும் ஆற்றல் பெற்றவனே தூதனாவான்.
“செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்.” ---குறள்.637.
கல்வி அறிவால் ஒரு செயலைச் செய்யும் வகைகளை அறிந்திருந்த போதிலும் உலகத்தின் இயற்கை அறிந்து அதனோடு பொருந்துமாறு செய்தல் வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக