வியாழன், 3 மே, 2018

திருக்குறள் -சிறப்புரை :865


திருக்குறள் -சிறப்புரை :865
வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க்கு இனிது.--- ௮௬௫
வாழும் வழி அறியான் ; நல்வழி வாய்ப்பினும் மேற்கொள்ளான்; தீவினையால் வரும் பழிக்கு அஞ்சான்; நற்பண்பு இல்லான் ஒருவன்,  பகைவர்க்கு எளிதாக இரையாவான்.
“நல்லவை நாள்தொறும் எய்தார் அறம் செய்யார்
இல்லாதார்க்கு யாதொன்றும் ஈகலார்-எல்லாம்
இனியார் தோள் சேரார் இசைபட வாழார்
முனியார் கொல் தாம் வாழும் நாள்.” ---நாலடியார்.
நாள்தொறும் நல்லவை நாடார்; அறம் செய்யார் ; இல்லாதவர்க்கு ஒன்றும் கொடுக்கார் ; தன் மனைவியை விரும்பார் ; பிறர் பெருமையாகப் பேசும்படி வாழார்  ஆயினும் தாம் வீணே வாழும் காலங்களையெல்லாம் வெறுக்க மாட்டார்களோ ? (வெறுப்பில்லாமல் வாழ்வது வியப்பே.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக