செவ்வாய், 15 மே, 2018

திருக்குறள் -சிறப்புரை :877


திருக்குறள் -சிறப்புரை :877
நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவ ரகத்து. --- ௮௭௭
(பகைவர் அகத்து)
ஒருவன்,  தான் துன்புற்றதை அறியாதவர்களிடத்துத் தானே சென்று தன் துன்பத்தைச் சொல்லக்கூடாது அதைப்போலத் தன்னுடைய இயலாமையை தானே பகைவர்களிடத்துச் சொல்லக்கூடாது.
“தான்கெடினும் தக்கார் கேடு எண்ணற்க தன்னுடம்பின்
ஊன்கெடினும் உண்ணார் கைத்து உண்ணற்க…”—நாலடியார்.
தான் கெட்டுப்போனாலும் பெரியோர்க்குக் கேடு செய்ய நினைக்காதே, உடம்பே இளைத்து ஒழிந்தாலும் உண்ணத் தகாத பகைவர் கையிலே உள்ள உணவைப்பெற்று உயிர் வாழாதே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக