வெள்ளி, 11 மே, 2018

திருக்குறள் -சிறப்புரை :873


திருக்குறள் -சிறப்புரை :873
ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்.---- ௮௭
தான், தனி ஒருவனாக இருந்துகொண்டு பலரிடமும் பகைமையைத் தேடிக்கொள்பவன் பித்துப் பிடித்தவர்களைவிட அறிவு கெட்டுப்போனவனாவான். (அஃதாவது புத்தி பேதலித்தவன்.)
“உடையார் இவர் என்று ஒரு தலையா பற்றிக்
கடையாயார் பின் சென்று வாழ்வர்….” –நாலடியார்.
பொருள் உடையவர் இவர் என்று நினைத்து, அவரை உறுதியாய்ப் பற்றிக்கொண்டு, கீழ்மக்களின் பின்னே போய்ப் பிழைப்பர் சிலர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக