திங்கள், 22 ஜூலை, 2019

தொல்தமிழர் அறிவியல் - 29


தொல்தமிழர் அறிவியல் - 29

6. கரு உருவாகும் காலம்

பூப்பின் புறப்பாடு ஈர் ஆறு நாளும்
நீத்து அகன்று உறையார் என்மனார் புலவர்
பரத்தையிற் பிரிந்த காலை யான.
         தொல். பொரு. கற். 187.
                தலைவிக்கு மாத விலக்குத் தோன்றிய ( மூன்று நாள் கழிந்த பின்பு) பன்னிரண்டு நாளும் தலைவன் அவளை விட்டுப் பிரிந்திருத்தல் இல்லை என்று கூறுவர் புலவர். இதனால் பயன் என்னையெனின் அது கருத் தோன்றும் காலம் என்க.
                        இத்தகைய ஓர் அறிவியல் ஆய்வை நிகழ்த்தி மெய்ப்பிக்க எத்தனை ஆண்டுக் காலம் ஆகியிருக்கும் என்பதை எண்ணிப்பாருங்கள்.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உடலியல் குறித்த ஆய்வில் தொல்காப்பியரின் அறிவியல்  அறிவை ஈண்டுக் காணமுடிகிறது.
இன்று, பூப்பு வெளிப்பட்ட பத்தாம் நாளிலிருந்து பதினைந்தாம்  நாள் வரையில்தான் கருத்தோன்றும் என்பர்.
 அறிவியல் நோக்கு
                        For women with regular menstrual  cycles between 26-32 days it is much easier to simply know that they  can get pregnant as early as day 8 of their cycle and as late as day 19 of their  cycle and on all the days in between. If they  have intercourse often during this time, they have an extremely high probability of getting pregnant. Many women using this family planning method find that as they become more familiar with their cycles, they begin to notice fertility signs such as secretions or light cramping which may help them pinpoint ovulation.  
                                                                                                                   Cycle Technologies
                                                                                               5335 Wisconsin Ave., Suite 440
                                                                                              Washington, DC 20015
                      தொல்காப்பியர் கூறியவாறு கருத்தோன்றுங்காலமாவது 4 ஆம் நாள்முதல் 12 நாட்கள், ,இக்கணக்கின்படி 15 நாட்கள ஆகின்றன. மருத்துவ அறிவியலின்படி 8 முதல் 19 ஆம் நாள்வரை கருத்தோன்றும் காலமாகும், இக்கணக்கின்படி 12 நாட்கள் ஆகின்றன.. மூவாயிரம்        ஆண்டுகளுக்கு முன்னர் வரையறுத்த காலஅளவு இன்றும் பொருந்திவருகிறது. கால அளவில் இடம்பெற்றுள்ள சிறு வேறுபாடுகூட உடலியல் வளர்ச்சி மாற்றமாகலாம், நாடுகளின் தட்ப வெப்ப நிலையும் கூடக் காரணமாகலாம்.
                      தொல்தமிழர் அறிவியல்  திறனை மதிப்பிடுவதற்கு, பழந்தமிழ் நூல்களில் அரிய அறிவியல் செய்திகள் நிறைந்துகிடக்கின்றன. பல்துறை அறிஞர்களின் கருத்துகளோடு  பழந்தமிழ் நூல்களை ஆராயப்புகின், அறிவியல் வரலாற்றில் தமிழ்ச் சான்றோர்களுக்குச் சிறப்பான இடம் உண்டு என்பதைக் கண்கூடாகக் காணலாம்.

     “ Tolkappiyam is the earliest extant Tamil treatise with three divisions. The first one deals with orthography and the second speaks about etymology. The last one is a generalia that pictures social habits such as love, romance and other contemporary traditions. That division known as Porul Adikaram in its 4th chapter says that husbands do not go away from their wives, normally for a period of 12 days from the third day onwards when those ladies undergo their menstrual cycle. In other words, the wives are most likely to become pregnant when their husbands co-habit with them in the said period of twelve days. A book on Physiology entitled ‘Cycle Technologies’, published from 5335, Wisconsin Avenue, Washington D.C is found to be corroborative evidence for what has been said by the Tamil treatise Tolkappiyam of the Pre-christian era.” ---Editor. 

1 கருத்து:

  1. சற்றொப்ப இதே போன்ற கருத்துடைய (கரு உருவாகும் காலம்) பதிவினை முன்பு நீங்கள் இட்டதாக நினைவு ஐயா.

    பதிலளிநீக்கு