திங்கள், 12 ஆகஸ்ட், 2019

தொல்தமிழர் அறிவியல் – 50 : 15. பசலை

தொல்தமிழர் அறிவியல் – 50 : 15. பசலை

Anxiety or Increased Arousal

The symptoms of ASD may include anxiety and increased arousal. The symptoms of anxiety and increased arousal include:
·         having trouble sleeping
·         being irritable
·         having difficulty concentrating
·         being unable to stop moving or sit still
·         being constantly tense or on guard
·         becoming startled too easily or at inappropriate times
                                                                          ----- Healthline Media.
பசலை…..  ( ஒவ்வாமை ; தோல் அழற்சி )

                             In addition to irritants and allergens, emotional factors, skin infections, and temperature and climate play a role in atopic dermatitis. Although the disease itself is not caused by emotional factors, it can be made worse by stress, anger, and frustration. Interpersonal problems or major life changes, such as divorce, job changes, or the death of a loved one, can also make the disease worse.


                                மேற்சுட்டியுள்ள மருத்துவ அறிவியல் காரணிகளோடு, காதல்காமம்பிரிவுமன அழுத்தம் முதலிய காரணிகளோடு பசலை நோய் தோற்றம் குறித்துச் சங்கப்புலவர்தம்  கூற்றை ஆராய்ந்து காண்போம்.

காம நோய்

அன்னாய் வாழி வேண்டு அன்னை ஒள்நுதல்
ஒலிமென் கூந்தல் என் தோழி மேனி
விறல் இழை நெகிழ்த்த வீவு அருங் கடுநோய்
-கபிலர் , குறிஞ்சிப். 1 – 3

                      ஒளி பொருந்திய நெற்றியையும் தழைத்த மெல்லிய கூந்தலையும் பிறர் நிறத்தினை வெல்லும் வெற்றியுடைய நிறத்தினையும் உடைய என் தோழி, தன் மனத்திற்குள், தன் உயிரைத் தாங்கியிராமைக்குக் காரணமாகிய ஆற்றுதற்கரிய நினைவினை மறைத்தாள்; அதனால் அவள் அணிந்திருந்த அணிகள் நெகிழப்பெற்றன. மருந்துகளால் நீக்குதற்கரிய கடிய இந்நோயை நினக்குச் சொல்லுதல் எளிதன்றுவலிமையுடைத்து…..( வீவு அருங் கடு நோய்போக்குதற்கரிய காம நோய்.)

                            காமநோயின் ஆற்றலைத் தாக்குப்பிடிக்கமுடியாத உடலும் உள்ளமும் அடைந்த நிலையைத் தோழியின் கூற்றாகத் தான் அறியமுடிகிறது. இக்கூற்று, குடிப் பெருமையின் பண்பாடு சார்ந்தது, ஒரு பெண்ணின் களவொழுக்கம் நேர்கூற்றாக அமைதல் இயலாததொன்றாகும்.

நோய்க் குறிகள்

                            சுவையறிதலில் ஐம்புலன்களில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சுவையை மட்டுமே அறியும் ஆற்றல் உண்டு ; ஐம்புலன்களும் ஒருசேர துய்க்கும் சுவைஇன்பச்சுவைகாம இன்பம் ஒன்றே. அதனால்இன்பத்துட் சிறந்தது காம இன்பம்என்பர்.

காமக் களிப்பு

தெண் நீர் மலரின் தொலைந்த
கண்ணே காமம் கரப்பு அரியவ்வே
                               --கணக்காயனார், நற். 23 : 8, 9

தெளிந்த நீரில் உள்ள மலர்போன்ற இவள் கண்கள் அழகு இழந்தன ; அவை காமத்தை மறைக்க இயலாது தவிக்கின்றன.

கவலை

காரிகை பெற்ற தன்கவின் வாடக் கலுழ்பு ஆங்கே
பீரலர் அணிகொண்ட பிறை நுதல்

--நல்லந்துவனார், கலித். 124 : 7 – 8
தலைவி, தான்பெற்ற பேரழகு கெடும்படி மனம் கலங்குவதால் பீர்க்கம் பூவை அடுக்கி வைத்தாற் போன்று, பிறை போன்ற நெற்றியில், பசலை படர்ந்து பரவி உள்ளதே.

உரம் செத்தும் உளெனே தோழி என்
நலம் புதிது உண்ட புலம்பினானே

--உறையூர் முதுகண்ணன் சாத்தன், குறுந். 133: 4, 5
தோழி ! தலைவன், என் பெண்மை நலத்தை நுகர்ந்து, பிரிந்து சென்றுவிட்டான், தனிமையில் தவித்து, என் உடல் வலிமை அழிந்தும் இன்னும் உயிருடன் இருக்கின்றேனே, என்றனள் தலைவி. ….. –தொடரும்......

1 கருத்து: