வியாழன், 22 ஆகஸ்ட், 2019

தொல்தமிழர் அறிவியல் – 60 : 20. தீக்கடை கோல்

தொல்தமிழர் அறிவியல் – 60 : 20. தீக்கடை கோல்

20. தீக்கடை கோல்

                    வரலாற்றுக்கு முந்தைய காலக்கட்டங்களில் காட்டில் வாழ்ந்த  பழங்குடியினர் செம்பருத்தி மரக்கிளையை இரண்டாகப் பிளந்து, கூரிய குச்சியால் உரசித் தீ மூட்டினர்.----டிஸ்கவரி --23/2/17

"இல் இறைச் செரீஇய ஞெகிலிகோல் போல்"
                                                 -ஒளவையார், புறநா. 315 : 4
தீக் கடை கோல் பயன்படுத்தப்படாத காலங்களில், வீட்டின் இறப்பில் செருகிவைக்கும் பழக்கம் சுட்டப்பட்டுள்ளது.

கல்பொறி பிறப்ப நூறி கல்லுறுத்தி இயற்றியஅகநா.
புல்லென் மாலைச் சிறுதீ ஞெலியும்
கல்லா விடையன் போல….. புறநா.331: 4-5
இடையன் பொத்திய சிறுதீ விளக்கத்து --- புறநா. 324:11
இடையன்…… ஞெலிகோற் கொண்ட பெருவிறன் நெகிழிச்
செந்தீ ……………. பெரும்பாண் 175 – 179.

மலைப் பகுதியில் வாழ்ந்த பழங்குடியினர் சிக்கி முக்கிக் கல் கொண்டு தீ மூட்டினர்.                                                  

"பருவம் செய்த பானாட் கங்குல்
ஆடுதலைத் துருவின் தோடு ஏமார்ப்பக்
கடைகோல் சிறுதீ அடைய மாட்டித்
திண்கால் உறியன் பானையன் அதளன்
நுண்பல் துவலை ஒருதிறம் நனைப்ப
தண்டுகால் ஊன்றிய தனிநிலை இடையன்
மடிவிடு வீளை கடிதுசென்று இசைப்ப
தெறிமறி பார்க்கும் குறுநரி வெரீஇ
முள்ளுடைக் குறுந்தூறு இரியப் போகும்."
                                              --------இடைக்காடனார், அகநா. 274: 3 – 11

                                 கார்காலப் பருவத்து நள்ளிரவில் திண்ணிய தாம்புக் கயிற்றினைக் கொண்ட உறியினையும் பானையையும் தோற்படுக்கையையும் கொண்டு, நுண்ணிய பலவாய மழைத்துளிகள் தனது காலின் ஒரு பக்கத்தே நனைக்க கோலினைக் காலுடன் சேர்த்தி நிற்கும் இடையன் செம்மறியாட்டின் கூட்டம் பாதுகாவலினைப் பெறுமாறு தீக்கடையும் கோலாலே கடைந்தெடுத்த சிறுதீயை விறகிற் சேர்த்து மிக்கு எரியுமாறு செய்தான்…..தொடரும்……

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக