தமிழமுது –266– தொல்தமிழர் இசை மரபு:126. நீட்சியும் - வீழ்ச்சியும். ஆடல் + பாடல் = கூத்து (நாடகம்)
இசைமரபு - எழுச்சி ; பக்தி இலக்கியங்கள்: பண்சுமந்த பாடல்கள்.
பண்சுமந்த பாடல்கள் அட்டவணை
இனி இக்காலத்து வழங்கும் இராகப் பெயர்களில் இப்பண்களூக்குரிய இராகங்கள் இன்னின்ன வென்பதை கண்டுபிடிப்பது இயற்புலவரும், இசைப்புலவரும் சேர்ந்து செய்யத்தக்க வேலையாகும். இராகங்களுக்குள்ள சுரங்களின் கணக்கு முதலியவற்றால் இதற்கு இது ஒத்தது என்று கண்டால் கூடும் . சில நாட்கள் இன்ன பண்ணுக்கு இன்ன ராகமென்று பழகிவிட்டால் பிறகு பண்ணின் பெயரே வழக்
கத்துக்கு வந்துவிடும். தமிழிசையின் எழுச்சிக்கு இஃது இன்றியமையாது செய்யத்தக்க பணியாகும். இப்பொழுது இன்ன பண்ணினை இன்ன ராகத்தில் பாட வேண்டுமென்று சிலர் பரம்பரையிற் பாடி வருகின்றனர். அதனையும் ஆராய்ந்து செம்மைப்படுத்துதல் வேண்டும்.
“பகற்பண்:
பண் -புறநீர்மை; இராகம் -ஸ்ரீகண்டி ;
பண்-காந்தாரம் இராகம் - இச்சிச்சி;
பண் - கெளசிகம், இராகம் - பியரவி ;
பண் - இந்தளம், இராகம் - நெளத்த பஞ்சமி ;
பண் - தக்கேசி, இராகம்- காம்போதி ;
பண் - நட்டராகம்,சாதாரி , இராகம் - பந்துவராளி ;
பண் - நட்டபாடை, இராகம் - நாட்டைக்குறிஞ்சி ;
பண் - பழம்பஞ்சரம், இராகம் - சங்கராபரணம் ;
பண் - காந்தார பஞ்சமம், இராகம் - கேதாகெளவாணம் ;
பண் - பஞ்சமம் , இராகம் - ஆகிரி.
இராப்பண் :
பண் - தக்கராகம் - இராகம் - கன்னடகாம்போதி ;
பண் - பழந்தக்கராகம் ; இராகம் - சுத்த காவேரி ;
பண் - சீகாமரம் - இராகம் - நாதநாமக்கிரியை ;
பண் - கொல்லி,கொல்லிக் கெளவாணம் இராகம் சிந்து கன்னடா ;
பண் - திருநேரிசை, திருவிருத்தம், இராகம் - -------- ;
பண் - வியாழக்குறிஞ்சி , இராகம் - செளராஷ்டிரம் ;
பண் - மேகராகக்குறிஞ்சி இராகம் - நீலாம்பரி ;
பண் - குறிஞ்சி - இராகம் - மலகரி ;
பண் அந்தாளிக், இராகம் - சைலதேஷ்ட்சி.;
மேற்குறித்துள்ள செய்திகள் மணிமலர் 1941இல் அறிஞர் ந.மு.வே. நாட்டார் அவர்கள் வழங்கிய கட்டுரைத்தொகுதி.
திருமுறைகண்ட முதலாம் இராசராச சோழ மன்னரும் நம்பியாண்டார் நம்பியும் திருவெக்கத் தம்புலியூரில் திரு நீலகண்ட யாழ்ப்பாணர் மரபில்வந்த மடந்தையொருத்தி இசையில் வல்லாளென்பதைத் திருவருளால் அறிந்து அம்மாதினால் தேவாரத்திற்குப் பண்ணடைவு செய்வித்தனர் என்பது வரலாறு.
.............தொடரும்............
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக