செவ்வாய், 12 மே, 2026

தமிழமுது –290– தொல்தமிழர் இசை மரபு:150 ....ஆழ்வார்கள் அருளிய, தெய்விகப் பண்கள் ; ’

 தமிழமுது –290– தொல்தமிழர் இசை மரபு:150 - நீட்சியும் -  வீழ்ச்சியும்.எழுச்சியும் : ஆடல் பாடல் கூத்து (நாடகம்) 

இசைமரபு - மறுமலர்ச்சி - நாலாயிர திவ்வியப் பிரபந்தம் 

ஆழ்வார்கள் அருளியதெய்விகப் பண்கள் ;  

நாக்கொண்டு மானிடம் பாடேன்’ என்னும் திருமழிசை ஆழ்வார் வாக்கினைக்குறிக்கொண்டு ஆழ்வார்கள் அனைவரும் மனிதரைப் பாடாத மாண்புடையர் என்பது பொய்கயாழ்வார் பாடல்களே சான்றாக விளங்குகின்றன.  

வாயவனை யல்லாது வாழ்த்தாது கையுலகம்   

தாயவனை யல்லது தாம் தொழா - பேய்முலை நஞ்    

சூசுணாக வுண்டானுறு வொடுபே ரல்லால்  

காணாகண் கேளா செவி.” (முதல் திருவந்தாதி -11.)என்றும்  

நாட்டிலும் நின்னடியே நாடுவன் நாடோறும்    

பாட்டிலும்  நின்புகழே பாடுவன் - சூடிலும்  

பொன்னாழி யேந்தினான் பொன்னடியே சூடுவேற்  

கென்னாகி லென்னே யெனக்கு- (முதல் திருவந்தாதி . 88.) என்றும்  

 அவர் திருமால் சீரின்றி பிறிதொன்றும் பாடாத இயல்பினர் என்பதை அறியலாம்பொய்கை ஆழ்வார்வாய் அவனை அல்லது வாழ்த்தாதுபாட்டிலும் நின் புகழே பாடுவன்’ என்றும் ‘மாயவன் அவனை அல்லால் இறையேனும் ஏத்தா என் நா என்றும் போற்றியுரைக்கின்றார் 

 ஆழ்வார்களின் பண்ணிசைப் பாடல்கள்கவிதைப்பாங்குகற்பனைசொல்லமைப்பு , இனிமைஇசைத்தன்மைஉள்ளம் உருக்குதல்முதலியவற்றில்  திருமுறைகளும் பாசுரங்களும் இரண்டும் மேற்சுட்டியுள்ள பொதுவியல்புகளைக் கொண்டுள்ளனசம்பந்தருக்குப் பெரியாழ்வாரும்அப்பருக்குத் திருமங்கை ஆழ்வாரும் மாணிக்கவாசகருக்கு நம்மாழ்வாரும் ஈடாக உள்ளனர்திருமுறை பிரபந்தத்தைவிட அளவில் பெரியது.  

குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி   

வடதிசை பின்பு காட்டித் தென்திசை இலங்கை நோக்கிக்   

கடல்நிறக் கடவுள் எந்தை அரவணைத் துயிலுமாக் கண்டு    

உடலெனக்கு ருகுமாலோ என்செய்கேன் உலகத்தீரே.”  

என்று இறைவனின் திருக்கோலத்தை தொண்டரடிப்பொடி ஆழ்வார் பாடி மகிழ்வார் 

“ அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக   

இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி  

ஞானச்சுடர் விளக்கேற்றினேன் ாரணர்க்கு   

ஞானத் தமிழ்புரிந்த நான்.”  

என்று பூதத்தாழ்வார் இறைவனைப் போற்றி ஒழுகிய திறத்தைப் பாடி மகிழ்கின்றார். 

.................................தொடரும்........................................................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக