வெள்ளி, 17 ஜூலை, 2026

ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம்:-39. உரையாசிரியர்- பேராசிரியர்:

 ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம்:-39.  

                தொல்காப்பிய உரையாசிரியர்கள்  

                  உரையாசிரியர்- பேராசிரியர் மு.வை.அரவிந்தன். 

பேராசிரியர் அடிச்சுவட்டில் 

                          பேராசிரியர் என்பது  கல்வி, ஒழுக்கம் அகியவற்றால் சிறந்து விளங்கியவரைக் குறிக்க எழுந்த பெயர். இவரது இயற்பெயர் இன்னதென்று அறிய முடியவில்ல. நச்சினார்க்கினியர் தம் உரைகளில் பேராசிரியர் என்ற பெயரையே வழங்கிகின்றார். பேராசிரியரைப் பின்பற்றி நச்சினார்க்கினியர் உரை எழுதும் இடங்கள் பல உண்டு. இருவர் உரைகளையும் ஒப்பிட்டுக் காணச் செய்யுளியல் ஒன்றே திணை புரிகின்றது. 

                      அவ்வியல்களுக்கு அமைந்துள்ள இரு பெரும் உரையாசிரியர்களின் உரையை ஒப்பிட்டு நோக்கினால், பேராசிரியரின் பெருமை புலனாகும்; பேராசிரியரின் அடிச்சுவட்டினையே நச்சினார்க்கினியர் பெரிதும் பின்பற்றி நடக்கின்றார் என்பது விளங்கும். உரை எழுதும் முறை, சொல்லும் வகை, சொற்பொருள உரைக்கும் திறன், மேற்கோள் ஆட்சி, உரைநடைப் போக்கு ஆகிய எல்லாவற்றிலும் நச்சினார்க்கினியர் பேராசிரியரையே பின்பற்றுகின்றார்.  

                         பேராசிரியர் வேதம் கூறும் வைதிக நெறியைப் பின்பற்றுபவர்.. செய்யுளியலில் (109) ‘ வாழ்த்தப்படும் பொருளாவன- கடவுளும் முனிவரும் பசுவும் பார்ப்பாரும் அரசரும் மழையும் நாடும் என்பன.என்று கூறுகின்றார், இங்கே வைதிகச் சமயச் சாயலைக் காணலாம். இவர் வைதிக நெறியைப் பின்பற்றுபவர் என்பதை உணர்த்தும் 

         மறைந்துபோன உரைப்பகுதிகள் :   

                    பேராசிரியர், பொருளதிகாரம் முழுமைக்கும் உரை இயற்றினார் என்ப்பதற்குப் பல சான்றுகள் உ்ள்ளன.. இன்று மெய்ப்பாட்டியல், உவம இயல், செய்யுள் இயல், மரபியல் ஆகிய நான்கிற்கு மட்டுமே அவரது உரை கிடைக்கின்றது 

                            அவை வெட்சியுள்ளும் ஒழிந்த திணையுள்ளும் காட்டப்பட்டன’ (ெய். 189)  

காரணம் களவியலுள் கூறினாம்” (மெய்.18)   

 “அகத்திணை இயலுள் கூறினாம்.(மெய். 19)  

“   முன்னர் அகத்திணை இயலுள் கூறி வந்தோம் ‘ (செய். 1.)    

முன்னர் அகத்திணை இயலுள் கூறினாம். (செய். 80.)  

என்று பேராசிரியரே கூறுவதால் பொருளதிகாரம் முழுமைக்கும் உரை செய்தார் என்று அறியலாம். ......................................தொடரும்..............................  

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக