வியாழன், 2 ஜூலை, 2015

புறநானூறு – அரிய செய்தி - 21-25

புறநானூறு – அரிய செய்தி - 21
                                                             எறும்பும் மழையும்
பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி
முட்டை கொண்டு வன்புலம் சேரும்
சிறு நுண் எறும்பின் சில் ஒழுக்கு ஏய்ப்ப
                                   சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், புறநா.173 : 5 – 7
றும்பினம் தரையிலுள்ள அளைகளில் வாழ்வனவாதலாலும் மழை பெய்துவிடின், அளைக்கண் நீர் புக்கு அவற்றின் முட்டைகளைச் சிதைக்குமாகலானும் மழை வரவு காட்டும் காற்றினைக் கொண்டு அறிந்து மேட்டிடத்து அளைகளில் தம் முட்டைகளைக் கொண்டு சேர்க்கும் இயல்பினவாம்.
     ஆய்வு நெறி :-அறிவியல் அணுகுமுறை
புறநானூறு – அரிய செய்தி - 22
                                                                        புராணக் கதை
அணங்குடை அவுணர் கணம் கொண்டு ஒளித்தென
சேண்விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது
இருள் கண்கெடுத்த பருதி ஞாலத்து
இடும்பை கொள் பருவரல் தீர கடுந்திறல்
அஞ்சன உருவன் தந்து நிறுத்தாங்கு
                                       மாறோக்கத்து நப்பசலையார், புறநா.174 : 1 – 5
பிறரை வருத்தும் அச்சத்தினை உடைய அசுர்ர் கூட்டம் தேவர்களுடன் பொருதவழி, ஞாயிற்றைக் கொண்டுசென்று மறைத்தனர் ; சேய்மைக்கண் விளங்குகின்ற ஞாயிற்றைக் காணாமையால் இருள் சூழ்ந்து உலகத்தாரின் கண்ணை மறைத்தது ; உலகத்தாரின் துன்பம் நீங்கும்படி மிக்க வலிமையும் கண் மை போலும் நிறம் கொண்ட திருமேனியும் உடைய கண்ணன் ஞாயிற்றை மீட்டுவந்து இவ்வுலகின் இருள் நீங்கும்படி வானில் நிறுத்தினான்.
புறநானூற்றின் தொன்மை -  புராணக் கதைகளின் தாக்கம் – வாய்மொழிக் கதைகளா?
- கொண்டதா, கொடுத்ததா ? - இப்புலவரின் ஏனைய பாடல்களை ஒப்புநோக்கி ஆய்க.

புறநானூறு – அரிய செய்தி - 23
                                                           மோரியர்
விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர்
திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைந்த
உலக இடைகழி அறைவாய் நிலைஇய
மலர்வாய் மண்டிலத்து அன்ன ....
                        ஆத்திரையனார், புறநா.175 : 6 – 9
விசும்பைத் தோயும் நெடிய குடையினையும் கொடியணிந்த தேரினையும் உடைய மோரியர், நிலம் முழுதும் ஆண்டனர். அம்மோரியரது ஆரக்கால் சூழ்ந்த சக்கரம் செல்லுதற்காக வெட்டி வழிசெய்யப்பட்ட   வெள்ளி மலைக்கு அப்பால், நிலைபெற்று விளங்கும் பரந்த இடத்தை உடைய சூரிய மண்டிலத்தை ஒப்பவன் நீ.
மேலும் காண்க :- அகநா. 69, 251, 281.
மோரியர் வரலாறு –  மோரியர் வடநாட்டு அரச மரபினர் - நிலம் முழுதும் ஆண்ட காலம் -  மலையைப் பிளந்து வழி அமைத்தல்.
வரலாற்றியல் அணுகுமுறை

புறநானூறு – அரிய செய்தி - 24
ஊரும் பேரும்
177- மல்லிகிழான் காரியாதி
மல்லிநாட்டுப் புத்தூர் – மல்லிபுத்தூர் – வில்லிபுத்தூர் – சீவில்லிபுத்தூர்
பழையர் –( குடவர்) – பளியர்                                
179 – நாலை( நாலூர் ) கிழவன்ஊர்
180 – ஈர்ந்தைஊர், நல்லார் - ஊர் 
293 – நொச்சி நியமம்ஊர்நொச்சியம் திருச்சி அருகில்
298 – ஆவியர் குடிஆலியார் குடி
              திருமங்கை மன்னன்சோழநாடு, பொதினிபழனி
           கலங்கிய கள் களிப்பு மிகுதியும் உடையதுதேறல்தெளிவும் இனிமையும் உடையதுகலங்கல்  -  தேறல்
299 – பொன்முடியார்  - பொன்முடிசேரநாடு
வெள்ளாத்திரி நாடுபொன்முடி நல்லூர் என்பர்
புறநானூறு – அரிய செய்தி - 25
                                                புலி வேட்டை
கடுங்கண் கேழல் இடம்பட வீழ்ந்தென
அன்று அவண் உண்ணாதாகி வழிநாள்
பெருமலை விடரகம் புலம்ப வேட்டு எழுந்து
இருங் களிற்று ஒருத்தல் நல்வலம் படுக்கும்
புலி பசித்தன்ன .....
                                  சோழன் நல்லுருத்திரன், புறநா. 190 : 6 – 10
பன்றி தனது இடப்பக்கத்தில் இறந்து வீழ்ந்து கிடப்ப, அதனை உண்ணாது சென்றது புலி ; அடுத்த நாள் பெரிய மலையில் தன் குகையிடத்துத் தனிமைப்பட, உணவை விரும்பி எழுந்து களிற்றை வலப்பக்கத்தே வீழுமாறு கொன்று உண்ணும்...
மேலும் காண்க : அகநா. 29, நாலடி. 300
புலி,  இடப்பக்கத்தே வீழ்ந்த இரையை உண்ணாதா ? ஆய்க.

முதன்மை நோக்கு : அறிவியல் அணுகுமுறை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக