தமிழமுது –267– தொல்தமிழர் இசை மரபு:127. நீட்சியும் - வீழ்ச்சியும். ஆடல் + பாடல் = கூத்து (நாடகம்)
இசைமரபு - எழுச்சி:
பக்தி இலக்கியங்கள்: பண்சுமந்த பாடல்கள்.
திருநாவுக்கரசர்.
திருநாவுக்கரசர், பரதகண்டமெங்கணும் பரந்து நிலவிய தொன்மைச் சமயமும் உண்மைத் திருநெறியுமாகிய சைவ சமயத்திற்குப் புறச்சமயங்களால் உண்டாகிய இடையூறுகளைக் களைந்து, அதன் மாண்பு மலை விளக்காய்த் திகழுமாறு செய்த பேரருளாளப்
பெருமக்களாம் சமயக்குரவர் நால்வருள் ஒருவராவார். இவர் பசுகரணமெல்லாம் பதிகரணமாகத் திகழப்பெறும் சீவன் முத்தி நிலையை எய்தியவரென்பது
“பாலை நெய்தல் பாடியதும் பாம்பொழியப் பாடியதும்
காலனையன் றேவிக் கராங் கொண்ட - பாலன்
மரணம் தவிர்த்ததுவும் மற்றவர்க்கும் நந்தம்
்கரணம்போல் அல்லாமை காண்.” (திருக்களிற்றுப்பாடியார்.)
முதல் ஈண்டு “உலகு” என்ற சொல் என்னும் ஆன்றோர் திருவாக்கினால் அறியப்படும். இவரது மெய் வரலாறு தில்லை அம்பலவாணர் அருளிய முதல்கொண்டு சேக்கிழார் பெருமான் பாடிய திருத்தொண்டர் புராணத்துள்ளே திகழ நிற்பது. சிவபெருமான் அருள் தலைக்கூடாமையால் உண்மைச்சமயம் இதுவென அறியப்பெறாது சமண சமயத்திற் புகுந்து பாடலிபுத்திரம் என்னுமிடத்தை அடைந்து நூலாராய்ச்சியில் மேம்பட்டவராய் புத்த சமயத்தவரை வாதில் வென்று தருமசேனர் என்னும் பெயருடன் இருந்து வந்தார்.
திருவாமூரில் இருந்த திலகவதியார் திருவதிகை வீரட்டானத்தை அடைந்து வீரட்டானேசுடருக்குத் திருவலகிடுதல், திருமெழுக்கிடுதல், திருப்பள்ளித் தாமம் தொடுத்துச் சாத்துதல் முதலிய திருப்பணிகளைச் செய்துவரும் நாளில் தமது தம்பியார் (மருணீக்கியார்) சமணசமயப் படுகுழியில் வீழ்ந்து கெடுவதை இறைவனிடத்தில் விண்ணப்பித்துவர, அதனை ஏற்ற சிவபெருமான் அவருக்குக் கனவிலே தோன்றி,”நின் தம்பி முற்பிறப்பிலே ஓர் முனிவனாகி நம்மையடையத் தவம் புரிந்தவன், சிறிது தம் இயற்றி இந்நிலையனாயினான் ; நாம் இனி அவனைச் சூலைமடுத்து ஆட்கொள்வோம் ; கவலை ஒழிக .”என்று அருள் புரிந்தார்.
தருமசேனருக்குச் சூலை நேரம் வந்துற்றது. சமணர் பலவகையான தீவினைச் செய்யவும் அது தீராது மேன்மேல் முறுகி வருத்தவே, உய்யுங்காலம் வந்தமையால் தமது தமக்கையை வேண்டி திருவதிகையை அடைந்து அவரை வணங்க, அவர் பரமசிவனது அருளை வியந்து அவருக்குத் திருநீற்றைத் திருவைத்துத் எழுந்தோதக் கொடுத்து, திருப்பள்ளி எழுச்சியிலே திருக்கோயிலுக்கு அழைத்துச்சென்று இறைவன்பால் ஆட்படுத்தினார்.
ஆட்பட்ட மருள் நீக்கியாரும் இறைவனை வலம்வந்து பணிந்து திருமுன்னின்று திருவருளினாலே பாடும் வன்மைப்பெற்றுத் தமது சூலை நீங்குமாறும் உலகினர் உய்யுமாறும் “கூற்றாயினவாறுு விலக்கலீர்’ என்னும் திருப்பதிகம் பாடி நோய் நீங்கிப் பேரின்பம் அடைந்து, தமக்கு மிகப் பெரிதாய உதவியைச் செய்ததென்று சூலையைப் பாராட்டினார். அப்பொழுது இறைவர் அவருக்கு ”நாவுக்கரசு ”என்னும் பெயரினைச் சூட்டி அருளினார். ...........................தொடரும்.........................................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக