திங்கள், 20 ஜூன், 2016

மலைபடுகடாம் – அரிய செய்தி : 21

மலைபடுகடாம் – அரிய செய்தி : 21
நன்னன் -  நாடு
ஞெண்டு ஆடு செறுவில் தராய்க்கண் வைத்த
விலங்கல் அன்ன போர்முதல் தொலைஇ
வளஞ்செய் வினைஞர் வல்சி நல்க
துளங்கு தசும்பு வாக்கிய பசும்பொதித் தேறல்
இளங்கதிர் ஞாயிற்றுக் களங்கள் தொறும் பெறுகுவீர்
   பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார், மலைபடு.  460 - 464
ஞெண்டுகள் ஆடித் திரியும், வயல்களுக்கு அருகில் உள்ள மேட்டு நிலத்தில் அமைக்கப்பட்ட மலையைப் போன்ற நெற்போர்களை அடிமுதல் அழித்துக் கடா விட்டு, வளமையை உண்டாக்கும் உழவர், வலையர் மகளிர்க்கு நெல்லை முகந்து தருவர். அம்மகளிர், களிப்பு மிகுதியால் அசைகின்ற மிடாவிலிருந்து வார்த்த, பசிய முளையால் ஆக்கிய கள்ளின் தெளிவை ஞாயிற்றின் இளங்கதிர்  பரவும் காலத்தில் களங்கள்தோறும் நீவிர் பெறுகுவீர்.
( தசும்பு – கள் குடம் ; வாக்கிய – ஊற்றிய ; களமர் – உழவர்;  தேறல் – கள்ளின் தெளிவு.)

1 கருத்து: