வெள்ளி, 29 ஜூன், 2018

திருக்குறள் -சிறப்புரை :921


93. கள்ளுண்ணாமை
திருக்குறள் -சிறப்புரை :921
உடகப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்----- ௯௨௧
(கள் காதல்)
கள்(மது) குடித்தலில் அதிக விருப்பம் (வெறி) கொண்டவர்கள் தன்மானத்தை இழந்து நிற்பர் ; எக்காலத்தும் அவர்களை எவரும் மதிக்க மாட்டார்கள்.
“ கள்ளும் களவும் காமமும் பொய்யும்
வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின். –சிலப்பதிகாரம்.
கள் உண்ணலையும் களவாடும் எண்ணத்தையும் இழிகாமத்தையும் பொய் உரைத்தலையும் பயனில பேசுவோர் நட்பையும் உறுதியுடன் கைவிடுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக