வெள்ளி, 11 ஜனவரி, 2019

திருக்குறள் -சிறப்புரை :1103


திருக்குறள் -சிறப்புரை :1103

தாம்வீழ்வார் மென் தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு. ---- ௧௧0.

தாம் காதல்கொண்ட மகளிரது மென்மையான தோள்மீது தலை சாய்த்துத்  துயிலும் இன்பத்தைவிடத்  தாமரைக்கண்ணன் உறையும் உலகம் இனிமை உடையதோ..?

வானத்து எழுஞ்சுவர் நல்லிசை வீழப்
பெய்த புலத்துப் பூத்த முல்லைப்
பசு முகைத் தாது நாறு நறுநுதல்
அரிவை தோளிணைத் துஞ்சிக்
கழிந்த நாள் இவண் வாழும்  நாளே.” –குறுந்தொகை.

வானத்தின்கண் எழுகின்ற கடும் ஒலியை ஒப்ப ஒலி உண்டாக, மழை பெய்த கொல்லையின்கண் மலர்ந்த முல்லையினது, பசிய அரும்பினது தாதின் மணம் போன்று மணம் வீசுகின்ற நல்ல நெற்றியை உடைய தலைவியின் இரண்டு தோள்களிலே துயின்று  கழிந்த நாட்களே இவ்வுலகத்தில் யான் வாழும் நாட்களாகும் ; ஏனைய நாட்கள் எல்லாம் என்ன பயனை உடையன..?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக