ஞாயிறு, 13 ஜனவரி, 2019

திருக்குறள் -சிறப்புரை :1105


உலகத் தமிழ் ஆர்வலர்கள், இணைய நண்பர்கள், அவர்தம் குடும்பத்தினர்கள் அனைவருக்கும்  நலமும் வளமும் பெருக,  இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள். நன்றியுடன்..!
திருக்குறள் -சிறப்புரை :1105
வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள். ----- ௧௧0.
மலர்மணம் கமழும் அழகிய கூந்தலை உடைய  இவளின் தோள்கள், விட்டகல நினையாத  வேட்கையால் விழையும் பொருள்களைப்போல விருப்புடன் புணருந்தோறும் இன்பம் அளிக்கின்றனவே.
தெவர்க்கு ஓக்கிய
வேலினும் வெய்ய கானம் அவன்
கோலினும் தண்ணிய தடமென் தோளே.” ---பட்டினப்பாலை.
திருமாவளவன், பகைவரைக் கொல்வதை நோக்கமாகக் கொண்டு உயர்த்திய வேலைக் காட்டிலும் தலைவன் கடந்து செல்ல வேண்டிய காடுகள் மிகவும் வெம்மையுடயவை ; அச்சத்தைத் தருபவை..
அவன் செங்கோலினும், தன் காதலியின் மெல்லிய தோள்கள் குளிர்ந்த இன்பம் பயப்பவை , என்று கூறித் தலைவியைவிட்டுப் பிரிந்து செல்வதைத் தவித்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக