திங்கள், 3 ஜூன், 2019

திருக்குறள் -சிறப்புரை :1297


திருக்குறள் -சிறப்புரை :1297

நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணாமடநெஞ்சிற் பட்டு. -------- ௨ ௯ ௭

என்னை மறந்து பிரிந்து சென்ற காதலரை மறக்க இயலாத, எனது கருணை இல்லாத நெஞ்சோடு, என் உயிரினும் மேலான நாணத்தையும் மறந்துவிட்டேன்.

பூவின் அன்ன நலம் புதிதுண்டு
நீயுணர்ந்த தனையே அன்மையின் யாமே
நேர்புடை நெஞ்சந் தாங்கத் தாங்கி
மாசில் கற்பின் மடவோள் குழவி
ஒய்ய வாங்கக் கைவிட்டாங்குச்
சேணும் எம்மொடு வந்த
நாணும் விட்டேம் அலர்க இவ்வூரே.” -----நற்றிணை.

கடற்கரைத் தலைவனே…! பூப்போன்ற எனது தலைவியின் நலத்தைப் புதுவதாக நுகர்ந்து வைத்தும், நீ அறியவில்லை ஆதலால், யாம் நினக்கு உடன்படுதலை உடைய எம் உள்ளம் வருத்தமுற, அதனை ஏற்றுக் குற்றமற்ற கற்பினை உடைய  பெண் ஒருத்தி, தன் குழந்தையைப் பலிகொடுப்ப வாங்குதலும், அவள் அதனைக் கைவிட்டாற்போல, முன்னாளின் முதற்கொண்டு எம்முடன் வளர்த்துவந்த நாணத்தையும் விட்டொழித்தோம் ;  இனி  இவ்வூரில் அலர் எழுவதாக.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக