சனி, 29 ஜூன், 2019

தொல்தமிழர் அறிவியல் - 6

தொல்தமிழர் அறிவியல் - 6
இயற்கையியல்
                 மேற்சுட்டிய உரைவழி தொல்காப்பியர்  முற்றுமுழுதாக இயற்கையை ஆராய்ந்து  - இயற்கையியல் என்னும் அறிவியல் துறையைத் தோற்றுவித்து..
1.  இப்பொருளை எட்டு வகையான் ஆராய்ந்தாரென்ப. என்றதுஇயற்கையியல்.
2.   அகத்திணை புறத்திணை என இரண்டு திணை வகுத்து, என்றதுவாழ்வியல்.
3.   கைகிளை முதற் பெருந்திணை யிறுவா யேழும் வெட்சி முதற் பாடாண்டிணை யிறுவாய் ஏழுமாகப் பதினான்கு பால் வகுத்து என்றதுஒழுக்கவியல்.
4.   ஆசிரியம், வஞ்சி , வெண்பா, கலி, பரிபாடல் , மருட்பா வென அறுவகைச் செய்யுள் வகுத்து, என்றதுசெய்யுளியல்.
5.  முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தலென நால்வகை நிலன் இயற்றி, என்றதுநிலவியல்.
6.  சிறுபொழுதாறும் பெரும்பொழுதாறுமாகப் பன்னிரண்டு காலம் வகுத்துஎன்றது- காலவியல்.
7.    அகத்திணை வழுவேழும் புறத்திணை வழுவேழுமென பதினான்கு வழுவமைத்துஎன்றதுபுறனடையியல்.
8.    வழக்கிடஞ் செய்யுளிடமென இரண்டு இடத்தான் ஆராய்ந்தாராதலின் என்றதுமொழியியல்.
எட்டிறந்த பல்வகையான் ஆராய்ந்தாரென்போர் முதல், கரு, உரியும் திணைதொறுமரீஇய பெயரும் திணைநிலைப் பெயரும் இருவகைக் கைகோளும் பன்னிருவகைக் கூற்றும் பத்துவகைக் கேட்போரும் எட்டுவகை மெய்ப்பாடும் நால்வகை உவமும் ஐவகை மரபும் என்பர். - என்றதுபுனைவியல். -------தொடரும்……

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக