செவ்வாய், 17 செப்டம்பர், 2019

தொல்தமிழர் அறிவியல் –86 : 27. புறா - கல் உண்ணல்

தொல்தமிழர் அறிவியல் –86 :  27. புறாகல் உண்ணல்

27. புறாகல் உண்ணல்

பொறிவரிப் புறவின் செங்காற் சேவல்
சிறுபுன் பெடையொடு சேண்புலம் போகி
அரிமணல் இயவில் பரல் தேர்ந்து உண்டு
               -காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார், அகநா. 271: 1- 3

புள்ளிகளையும் கோடுகளையும் சிவந்த கால்களையும் உடைய ஆண் புறாவானது, தன் புல்லிய பெட்டைப் புறாவுடன் தொலைதூர இடத்திற்குச் சென்று  ஆற்றில் நீரற்றுச் செல்லுமிடத்துள்ள கரு மணல் வழியில் உள்ள பரற்கற்களைத் தேர்ந்தெடுத்து உண்ணும்.

பூதம் காக்கும் புகல் அருங் கடிநகர்த்
தூது உண் அம் புறவொடு துச்சில் சேக்கும்
                           ----கடியலூர் உருத்திரங்கண்ணனார், பட்டினப்.  57 , 58

 அச்சம் கொண்ட கரிய குயில்கள்பூதங்கள் காக்கின்ற, ஒருவரும் புக முடியாத காவலையுடைய காளி கோட்டத்தின்கண் கல்லை உணவாக உண்டு வாழும் அழகிய புறாக்களுடன் குடியிருப்பாகத் தங்கும்,
( தூதுணம் புறவுகூழாங்கல்லை உண்ணும் புறாவகை )

 அறிவியல் நோக்கு…..

                                  Many birds practice geophagia, but not necessarily for nutritional reasons, but still to aid in digestion. Birds have a specialised organ in their digestive tract called a gizzard which is used in the grinding up of food stuffs (birds do not have the luxury of chewing as they don’t have teeth). The gizzard is composed of strong muscular tissue that  crushes and grinds food to allow for more effective chemical digestion, but many birds enhance their gizzard’s effectiveness by swallowing small stones or grit that stay in the organ, breaking down food particles, these pieces of stone are referred to as gastroliths

                 புறா தன் உணவாகத் தின்ற பழக்கொட்டைகள்காய்ந்த விதைகள் ஆகியவற்றின் தோல் கடினத் தன்மை உடையதாயிருப்பதால் புறாவால் அவ்வுணவைச் செரித்துக் கொள்ள முடியாது, அவற்றை உணவாக்கிக் கொள்ள அரைத்துப் பக்குவப்படுத்துவதற்குத் தேர்ந்தெடுத்த கற்களை அலகால் நொறுக்கி  உண்ணும் அவை இயற்கையாகவே புறாவுக்கு அமைந்துள்ள கற்குடலில் சென்று சேரும், பின்னர் உணவு செரிக்கப்படும். இத்தகைய குடல் அமைப்பு வேறு சில பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் உண்டு என்பர் அறிவியலாளர்.

                                  சங்கச் சான்றோரின் கூர்நோக்குஅறிவியலைப் புலப்படுத்துகிறது. புறாக்கள் இணையாகப்  பறந்து சென்றமை : ஆண், பெண் உருவ வேறுபாடுசெநிறக் கால்கள் ( புறாக்களில் 300க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன என்பர்.) உண்ணுதற்கேற்ற பரற்கற்களைத் தேடி வெகுதொலைவு பறந்தமை ; கற்களைத் தேர்ந்தெடுத்தது என இவையாவும் இன்றைய அறிவியலோடு முற்றிலும் பொருந்துகின்றன.

இரை

                         பறவைகள் வாழ்நாளில் பெரும்பகுதியை இரை தேடவும், உண்ணவுமே செலவழிக்கின்றன. அதிக எடை பறப்பதற்கு இடைஞ்சல் என்பதால் பறவைகளால் உடலில் உணவைச் சேமித்து வைக்க இயலாது. சிறிய பறவைகள் அடிக்கடி உண்பது அவசியமாகிறது.

                               பறவைகளில் சைவமும் அசைவமும் உண்டு. காக்கை போன்றன இரண்டையுமே உண்கின்றன. சில பறவைகள் சிறப்பாக குறிப்பிட்ட இரைகளை மட்டுமே உண்ணும். எடுத்துக்காட்டாக, எவர்கிளேட் கைட்என்ற பறவை நத்தைகளை மட்டுமே உண்ணும். பறவைகளின் வயிறு சிறப்புத் திறன் பெற்றது. கடினமான கொட்டைகள், செல்பிஷ் போன்றவற்றைக் கூட நொறுக்கி செரிமானம் செய்துவிடும். சில பழக்கொட்டை தின்னும் பறவைகள் சிறிய கூழாங்கற்களையும் சேர்த்துத் தின்கின்றன. இவை வயிற்றில் கொட்டைகளை நொறுக்க உதவுகின்றன. குஞ்சுகளுக்கு இரை எடுத்துச் செல்ல பல பறவைகள் வாய்க்குள் சிறிய பை போன்ற உறுப்புக்களைக் கொண்டுள்ளன

Grit – சிறு கற்கள் / பரல்

Gizzards – பறவைகளின் குடற்பைகளுள் இரண்டாவதான அரைவைப்பை ; கற்குடல் ; கல் தேக்க இரைப்பை. ------தொடரும்……

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக