செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

தன்னேரிலாத தமிழ்---118

தன்னேரிலாத தமிழ்---118

உறைஒற - Hora – Hour

செறு வினை மகளிர் மலிந்த வெக்கை

பரூஉப் பகடு உதிர்த்த மென் செந்நெல்லின்

அம்பண அளவை உறை குவிந்தாங்கு

அரிசில் கிழார் . பதிற். 71 : 3 - 5

வயலில் விளைந்த நெல்லை மகளிர் அறுத்துமிக நெருங்கிய காடாவிடும் களமாகிய போரடிக்கும் நெற்களத்தில் சேர்ப்பர். அவற்றைப் பருத்த எருமைகளால் மிதிக்கச் செய்து செந்நெல்லை மரக்காலால் அளத்தற்  பொருட்டுக் குவித்து வைப்பர்.  (  அம்பணம்மரக்கால் ; அம்பண அளவை உறைஅறுபது மரக்கால்ஓர் உறை ; அக் குவியலைப் பொலி என்பர். இந்த அறுபது அலகு கொண்ட உறைதிரிந்து ஒறஓறாஹவர்  என்று மணியைக் குறித்ததாகப்  புள்ளி என்னும் என் ஆய்வுக் கட்டுரையில் சுட்டியுள்ளேன் - கண்டு தெளிக. )

கை விடுப்புதம் கையினின்று பிறருக்கு விடுத்தல்கைமாற்று என்பர். பசு தரும் பயன் பெற்று வாழ்பவர் ஆயர்அவர்களின் தலைவன் கழுவுள்ஊர்- காமூர்இது பதினான்கு குடி வேளிரால் அளிக்கப்பட்டதென்றும் கூறுவர்-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக