புதன், 5 ஆகஸ்ட், 2020

தன்னேரிலாத தமிழ்---119

தன்னேரிலாத தமிழ்---119

தொல் தமிழர் வானியல் அறிவு

 நிலமும் பொழுதும் ( Time and Space )

என்றூழ் உறவரும் இரு சுடர் நேமி

ஒன்றிய சுடர் நிலை உள்படுவோரும்

நப்பண்ணனார் பரிபா. 19 : 46 – 47

திருப்பரங்குன்றத்துத் தெளிந்த ஓவியம் வரைந்து நிற்றலையுடைய மாடத்தின்கண் சென்றாராக -  சிலர் .நாண்மீன்களையும் தாரகைகளையும் உடைய சுடர்ச் சக்கரத்தைக் கண்டுஞாயிறு முதலாக வரும் கோள்களினது நிலைமைய விளக்கிஆண்டுத் தீட்டப்பட்ட ஓவியத்தைக் கண்டு உணர்ந்து கொள்வர். ( இவ்வாறு ஞாயிறு முதலாகப் பொருந்த இயங்கும்பண்டைக் காலத்துத் தமிழ்ச் சான்றோர் வானின்கண் உள்ள நாள் கோள் முதலியவற்றை ஆராய்ந்துஅவற்றைப் பொது இடங்களிலே ஓவியமாகவும் வரைந்துமாந்தர்க்கு அறிவுறுத்தி வந்தமை உணரப்படும்.மேலும் ஓவியங்கள் வாயிலாய் மக்களுக்கு இதிகாச முதலியவற்றையும் உணர்த்தியமை அறிக.)     

 

என்றூழ்ஞாயிறு, நாண்மீனும் பிற மீனுமாகிய இருவகை மீன்களும். ஞாயிறு முதன்மையாகப் பொருந்த இயங்கும். இவ்வடிகளானே பண்டைக் காலத்துத் தமிழ்ச் சான்றோர் வானின்கண் உள்ள நாள், கோள் முதலியவற்றை ஆராய்ந்து அவற்றைப் பொதுவிடங்களிலே ஓவியமாகவும் வரைந்து மாந்தர்க்கு அறிவுறுத்தி வந்தமை உணரப்படும். நாள் மீன்களையும் விண்மீன்களையும் உடைய சுடர்ச் சக்கரத்தைப் பொருந்தி ஞாயிறு முதலாக வரும் கோள்களினது நிலைமையை விளக்கி ஆண்டுத் தீட்டப்பட்ட ஓவியங்களைக் காண்பர்

 

நிலமும் பொழுதும் ~ தொல்காப்பியம்

மக்கள் வாழ்க்கை முறைகளை அடிப்படையகக் கொண்டு நிலமும் பொழுதும் பகுக்கப்பட்டுள்ளன  தொல்காப்பியரின் நிலம் பொழுது பற்றிய கருத்துகள் அறிவியலுக்குப் பொருந்துவதாகவே உள்ளன.

நிலப் பகுப்பு

அவற்றுள்

நடுவண் ஐந்திணை நடுவணது ஒழியப்

 படுதிரை வையம் பாத்திய பண்பே.  தொல். 19: 2

முற்கூறிய ஏழு திணைகளுள் நடுவில் இருக்கும் குறிஞ்சி முல்லை பாலை மருதம் நெய்தல் என்ற ஐந்திணைகளுள் பாலை நீங்கலாகக் கடலால் சூழப்பெற்ற இந்நிலவுலகத்தைப் பகுத்துக்கொண்டனர் என்பார்.

தொல்காப்பியர்  தமிழ் நிலப்பரப்பை நான்கு வகையாகப் பகுத்துள்ளார்.

1.   காடுறை உலகம்முல்லை

2.   . மைவரை உலகம்  - குறிஞ்சி

3.    தீம்புனல் உலகம்மருதம்

4.   பெருமணல் உலகம்  -  நெய்தல்

இப்பாகுபாடு அவ்வவ்நில இயற்கை வளங்களை அடிப்படையாக் கொண்டவையாகும்.


1 கருத்து: