வியாழன், 6 ஆகஸ்ட், 2020

தன்னேரிலாத தமிழ்---120

தன்னேரிலாத தமிழ்---120

     இமயம்

வடதிசை யதுவே வான் தோய் இமயம்

                  கழை வளர் இமயம் போல- 166

மூங்கில் வளரும் இமயம் போல

ஆரியர் துவன்றிய பேர் இசை இமயம்

தென்அம் குமரியொடு ஆயிடை

மன்மீக் கூறுநர் மறம் தபக் கடந்தே

                                         குமட்டூர்க் கண்ணனார், பதிற்றுப். 11: 23 – 25

ஆரியர் உறையும் அமைதி நிறைந்த இமயமலைக்கும் தென் திசையில் விளங்கும் அழகிய குமரிக்கும் இடைப்பட்ட நிலத்தே ஆளும் மன்னர்களுள்

செருக்கித் திரிவோரைப் போரிட்டு அழித்து  வென்றவனே. ( இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் )

கங்கை யாறு

வளமழை மாறிய என்றூழ்க் காலை

மன்பதை எல்லாம் சென்று உண கங்கைக்

கரைபொரு மலிநீர் நிறைந்து தோன்றியாங்கு

                                            பெருஞ்சித்திரனார், புறநா.161 : 5 - 7

மழை நீங்கிய கோடைக் காலத்தில் மன்பதை எல்லாம் சென்று நீருண்ணற்குக் காரணமான கங்கை பெரு வெள்ளத்தைப் போல ...

கங்கையை ஏன் பாடினார் ?

வட இமயம் தென் குமரி

 ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்

அமைதி நிறைந்ததும் முனிவர்கள் நிறைந்து விளங்கும்  பெரும் புகழ் உடையதுமான இமய மலைக்கும்தென் திசையில் விளங்கும் அழகிய குமரிக்கும் இடைப்பட்ட நிலத்தே ஆளும் மன்னர்களுள்செருக்கால் தம்மை உயர்த்திக் கூறிக் கொள்பவர்களுடைய வீரம் அழியுமாறு அவர்களோடு

தென் அம் குமரியொடு ஆயிடை

மன்மீக் கூறுநர் மறம் தபக் கடந்தே.

   குமட்டூர்க் கண்ணனார். பதிற்.11:  23 - 25

எதிர்நின்று பொருது வென்றாய். பண்டைய தமிழ்நாட்டின் எல்லை அறிக.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக