தமிழமுது –270– தொல்தமிழர் இசை மரபு:130. நீட்சியும் - வீழ்ச்சியும். ஆடல் + பாடல் = கூத்து (நாடகம்)
இசைமரபு - எழுச்சி: பண்சுமந்த பாடல்கள். சுந்தரர் செந்தமிழ்:
”பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.”
-- பொன்போன்ற திருமேனி உடையாய் ; புலித்தோலை உடுத்து, ஒளி பொருந்திய செஞ்சடைமேல் கொன்றைப் பூவை அணிந்தவனே, ; மாமணியே திருமழபாடியில் எழுந்தருளியுள்ள விலையில்லா மாணிக்கமே ; உன்னை அன்றி வேறு யாரை நான் நினைத்துப் போற்றுவது ; தாயாய் அருளைத் தாராயே..! என்று சுந்தரர் இறைவனைப் போற்றிப்் புகழ்கின்றார்.
சைவ சமய குரவர் நால்வருள் ஒருவராகிய ஆலால சுந்தரரையும், செண்டமிழ் என்பது அவர் பாடிய தேவாரத் திருப்பதிகங்களையும் குறிக்கும். சுந்தரர்க்கு அவர் நிலவுலகிலே தோன்றிய ஞான்று இடப்பெற்ற நம்பியாரூரர் என்னும் பெயரும், இறைவன் அவரைத் தடுத்தாட்கொண்டுபொழுது எதிர்த்து வன்மை பேசினமையின் எய்தி வன்தொண்டர் என்னும் பெயரும், அவர் திருவாரூரில் புற்றிடங்கொண்ட பிரானை வணங்கி,நன்புலன் ஒன்ற இன்ப வெள்ள்த்தில் மூழ்கி, இன்னிசைத் தமிழ்மாலை பாடியகாலை ‘தோழமையாக உனக்கு நம்மைத் தந்தேம்’ என்று இறைவன் அருளுனினமையால் போந்த தம்பிரான் தோழர் என்னும் பெயரும் நாவலர் கோன் என்பது முதலிய பெயர்களும் புராணத்தில் பயில வழங்குமேனும் சுந்தரர் என்னும் பெயரே பலராலும் அறியப்பெற்றதாம்.
.......................................தொடரும்.. ...........................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக