புதன், 13 மே, 2026

தமிழமுது –291– தொல்தமிழர் இசை மரபு:151....ஆழ்வார்கள் அருளிய, தெய்விகப் பண்கள் ; ’

 தமிழமுது –291தொல்தமிழர் இசை மரபு:151 - நீட்சியும் -  வீழ்ச்சியும்.எழுச்சியும் : ஆடல் + பாடல் = கூத்து (நாடகம்) 

இசைமரபு - மறுமலர்ச்சி - நாலாயிர திவ்வியப் பிரபந்தம் 

ஆழ்வார்கள் அருளிய, தெய்விகப் பண்கள் ; ’ 

        கீழ்க்காணும் பாடல், தொண்டரடிப் பொடியாழ்வார அருளி திருமால் பிரபந்தத்தின புகழ்பெற் பாடலாகும. இதில ஆழ்வார, அரங்கநாதனின பேரழகில மயங்கி, அவனத நாமங்கள உச்சரிக்கும இன்பத்த (பக்தி இன்பத்த) தவி, வேற எந் தேவலோ இன்பமும தனக்க வேண்டாம என்ற கூறுகிறார. 

 

  பாடல்: 
பச்சை மா மலை போல் மேனி பவளவாய்க் கமலச் செங்கண் 
அச்சுதா அமரரேறே ஆயர்தம்கொழுந்தே என்னும் 
இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகமாளும் 
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே! 

பாடலின் சுருக்கம்: 
இப்பாடல் தொண்டரடிப் பொடியாழ்வார் அருளிய திருமாலை பிரபந்தத்தின் புகழ்பெற்ற பாடலாகும். இதில் ஆழ்வார், அரங்கநாதனின் பேரழகில் மயங்கி, அவனது நாமங்களை உச்சரிக்கும் இன்பத்தை (பக்தி இன்பத்தை) தவிர, வேறு எந்த தேவலோக இன்பமும் தனக்கு வேண்டாம் என்று கூறுகிறார். 

வரிகள் வாரியான பொருள்: 

  • பச்சை மா மலை போல் மேனி: எம்பெருமானின் திருமேனி, மரங்கள் அடர்ந்த பச்சையான பெரிய மலையைப் போன்றும், 

  • பவளவாய்க் கமலச் செங்கண்: அவனது திருவாய் பவளம் போலவும், கண்கள் தாமரை மலர் போலவும் செந்நிறமாக அழகாக இருக்கின்றன. 

  • அச்சுதா அமரரேறே ஆயர்தம்கொழுந்தே என்னும்: அவனை 'அச்சுதனே' (நிலைபெற்றவனே), தேவர்களின் தலைவனே, இடையர் குலத்தின் கொழுந்தே (கண்ணனே) என்று அழைத்து உருகுகிறார். 

  • இச்சுவை தவிர யான் போய்: அவன் புகழைப் பாடி அனுபவிக்கும் இந்த பேரானந்தத்தைத் தவிர, 

  • இந்திர லோகமாளும் அச்சுவை பெறினும் வேண்டேன்: இந்திரன் ஆளும் தேவலோக இன்பம் தனக்குக் கிடைத்தாலும் அதை நான் வேண்டேன். 

  • அரங்கமா நகருளானே: ஸ்ரீரங்கத்தில் கோயில் கொண்டுள்ள பெருமானே! (உன் திருவடிகளே போதும்). 

ஸ்ரீரங்கநாதனின் அழகிலும் கருணையிலும் தன்னை மறந்த ஆழ்வார், சொர்க்க போகங்களை விட இறைவனின் பக்தியே மேலானது என்பதை இப்பாடல் மூலம் உணர்த்துகிறார். [1, 2] இணையப் பதிவு.  

ஆழ்வார்கள் உலகம் உய்யப் பாடினர். குலசேகர ஆழ்வார் போன்ற அருளாளர்கள் உலகம் உய்யப் பிறந்தவர்களே ஆவர். தாம் வணங்கும் அழகிய மணவாளன் தென்திச நோக்கிப் பள்ளிக்கொண்டிருப்பது, விண்ணும் மண்ணும் உய்வதற்காகவே என்கிறார் அவர் 

வன்பெரு வானகம் உய்ய   

அமரர் உய்ய   

மண் உய்ய மண்ணுலகில்    

மனிசர் உய்ய  துன்பமிகு துயர் அகல்     

அயர்வொன்று இல்லாச்    

  சுகம் ளர கமகிழும்  

 ொண்டர் ாழ  

அன்பொடு தென் திசை நோக்கிப் பள்ளிகொள்ளும் அணியரங்கண்.” 

 -என்பது பாடல்  உலகை உய்விப்பதிலும் இடரை அகற்றுவதிலிம்தான் ஆழ்வாருக்கு எத்தனை வேட்கை. வான் உய்ய, அமரர் உய்ய, மண் உய்ய, மனிசர் உய்ய என்று அடுக்கிச் சொல்வதே இதனை வெளிப்படுத்தும் . உலகுய்யப் பள்ளி கொண்டவனைத் துதிப்பதன்மூலம் இந்த வையகம் வாழவேண்டும் என்னும் விருப்பத்தை ஆழ்வார் வெளிப்படுத்துகின்றார். திருமால் நெறியைத்தீமையில்லாத நல்ல நெறியாகக் கண்டார். 

 ுலசேகரர்.கி.பி. 800 முதல் 1102 வரை குலசேகர மன்னர்களின் ஆட்சி உருவாயிற்று. குலசேகர ஆழ்வார் பெருமாள் திருமொழி தந்தார். சேரமான் பெருமாள் ஆதியுலாவையும் பொன்வண்ணத்தந்தாதியையும் அளித்தார். வேணாட்டடிகள் திவிசைப்பாவையும் தந்தனர், .................................தொடரும்............................... 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக