திங்கள், 31 ஆகஸ்ட், 2026

தொல்தமிழர் வழிபாடுகளும் விழாக்களும் -6. மொழிஞாயிறு பாவாணர் ஆய்வு:

  தொல்தமிழர் வழிபாடுகளும் விழாக்களும் -6.   

                                   வழிபாடுகள்: பெருந்தெய்வங்கள் -    

                         மொழிஞாயிறு பாவாணர் ஆய்வு:   

                         காளி கருப்பி. கள் -கள்வன் - கரியவன். கள் - காள் - காழ் = கருமை. காள் - காளம் = கருமை. காள் - காளி, காளி கூளிகட்குத் தலைவி , கூளி பேய் , பெய்- கருப்பென்றும் இருள் என்றும் பெயர் பெறும். கருப்பி, கருப்பாய் என்னும் காளியின் பெயர்களை, இன்றும் பெண்டிர்க்கிடுவது பெருவழக்கு. தாய் என்னும் பொருளில் அம்மை (அம்மன்) ஐயை என்றும் இளைஞை என்னும் பொருளில் கன்னி, குமரி என்றும் வெற்றி தருபவள் என்னும் பொருளில்  கொற்றவை (கொற்றவ்வை) என்றும் காளிக்குப் பெயர்கள் வழங்கும், அங்காளம்மை என்பது அழகிய காளியம்மை என்னும் பொருளது.  

                           ஆரியர் வருமுன் இந்தியா முழுவதும் திராவிடர் பரவியிருந்ததினால், வங்கநாட்டில் காளிக் கோட்டம் ஏற்பட்டது,  

                                    வேந்தன் = அரசன். முற்காலத்தில் அரசனும் தெய்வமாக வணங்கப்பட்டான். அதனால் இறைவன் என்னும் பெயர் அரசனுக்கும்  கடவுட்கும், கோயில் என்னும் பெயர் அரண்மனைக்கும் தெய்வக் கோட்டத்திற்கும் பொதுவாயின. வேந்தன் இறந்தபின்  வானவர்க்கும் அரசனாகி வானுலகத்தினின்று மழையைப் பொழிவிக்கின்றான் என்று பண்டை மருதநில மக்கள கருதியதால், மழை தெய்வத்தை வேந்தன் என்னும் பெயரால் வணங்கி வந்தனர்.  

                              ஆரியர் வருமுன்பே, மொழி வேறுபாட்டினால் வேந்தனுக்கு வடநாட்டில் வழங்கி வந்த பெயர் இந்திரன் என்பது. இந்திரன் அரசன், ஆகவே இரண்டும் ஒரு பொருட் சொற்களே. வேத ஆரியர் இந்திர ணக்கத்தை, வடநாட்டுத் திராவிடரைப் பின்பற்றியே மேற்கொண்டிருத்தல் வேண்டும். மேலையாரிய நாடுகளில் இந்திர வணக்கமே இருந்ததில்லை என்று மாகசு முல்லர் (MaxMuller.) கூறியிருப்பது இங்குக் கவனிக்கத்தக்கது.  

                          கடைக்கழகக் காலம்வரை காவிரிப்பூம்பட்டினத்தில் நடைபெற்றுவந்த இந்திரவிழாவும் தமிழர் வேந்தன் விழாவே.  

                          வாரணன் = கடல் தெய்வம், வாரணம் -கடல், கடலுக்கு ஒரு தெய்வம் இருப்பதாகக் கருதி அதை நெய்தல்நில மக்கள் வணங்கி வந்தனர். 

..............................................தொடரும்...............................  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக