புதன், 20 மே, 2015

41 - செவ்விலக்கிய நூல்கள்

41 -  செவ்விலக்கிய நூல்கள்
கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரையிலானவை

ஓர் அறிமுகம்
  தொல்காப்பியம்- எட்டுத்தொகை – பத்துப்பாட்டு – பதினெண்கீழ்க்கணக்கு – சிலப்பதிகாரம் – மணிமேகலை – முத்தொள்ளாயிரம் – இறையனார் களவியல்.


தொல்காப்பியம்

          தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூல் தொல்காப்பியம்.  தமிழில் தோன்றிய இலக்கண நூல்களில் பழைமையானது, ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியரால்  இயற்றப்பெற்றது. 
          தொல்காப்பியம் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்னும் மூன்று அதிகாரங்களை உடையதுஒவ்வொரு அதிகாரமும் ஒன்பது இயல்களைக் கொண்டதுமொத்தம் 27 இயல்கள்.  1610 நூற்பாக்கள்.
          தொல்காப்பியர், அவருக்கு முன்பு வாழ்ந்த இலக்கிய, இலக்கண அறிஞர்களின் கருத்துக்களைத் தொகுத்தும் அவருடைய காலக் கருத்துகளைச் சேர்த்தும் தொல்காப்பியத்தை உருவாக்கியுள்ளார்.
          தொல்காப்பியம் தோன்றிய காலத்தில் இதுபோன்ற ஒரு நூல் இந்திய மொழிகளிலோ உலக மொழிகளிலோ தோன்றவில்லை.
          தொல்காப்பியத்திற்கு எழுவர் உரையெழுதியுள்ளனர். இளம்பூரணர் தொல்காப்பியம் முழுமைக்கும் உரையெழுதியுள்ளார்நச்சினார்க்கினியர் எழுத்திற்கும் சொல்லிற்கும், பொருளில் சில இயல்களுக்கும் உரையெழுதியுள்ளார்பேராசிரியர், சேனாவரையர், தெய்வச்சிலையார், கல்லாடர் எழுதிய உரைகளும் பழைய உரை ஒன்றும் உள்ளன.
          தொல்காப்பியம் மொழி இலக்கணம் மட்டுமன்று; வாழ்வின் இலக்கணத்தையும் வகுத்துக் கூறும் நூல்தனி மாந்தனை முன்னிறுத்திப் பேசாது பொது மாந்தனை முன்னிறுத்திப் பேசுவது.
          தொல்காப்பியம் நிலந்தருதிருவிற் பாண்டியன் அவைக்களத்தில் அதங் கோட்டாசான்   முன்னிலையில் அரங்கேற்றப்பட்டதாகப் பனம்பாரனார் எழுதிய பாயிரம் குறிப்பிடுகிறது.
          1847ஆம் ஆண்டு மழவை மகாலிங்கையரால் தொல்காப்பிய எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரை முதன்முதல் பதிப்பிக்கப்பெற்றது.
·        1892-ஆம் ஆண்டு சி.வை. தாமோதரம்பிள்ளை தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரையை முதன்முதலில் பதிப்பித்தார்.
1885 சி. வை. தாமோதரம்பிள்ளை, தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் உரையை முதன்முதலில் பதிப்பித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக