வியாழன், 3 செப்டம்பர், 2015

நற்றிணை – அரிய செய்தி – 28 -29

நற்றிணை – அரிய செய்தி – 28
நட்புக்கு அழகு
உயிரோ ரன்ன செயிர்தீர் நட்பின்
நினக்கியான் மறைத்தல் யாவது மிகப்பெரிது
அழிதக் கன்றால் தானே…………….
இளம்பூதியார். நற். 72 : 3 – 5
 தோழி. தலைவியை நோக்கிக் கூறுவாள் – உயிரொத்த குற்றமில்லாத நட்பினையுடைய நின்பால்’ யான் மறைத் தொழுகுவது யாது பயனைச் செய்வதாம்- அது மிக மிக வருந்தத் தகுவதாகும். ( உயிரொத்த நண்பரிடையே ஒருவரின் ஒருவர் மறைத்த கருத்துடையராதல் நட்புக்குக் குற்றம் என்பது பற்றித் தனது நட்பினைச் சிறப்பித்து உரைத்தாள்.)
நற்றிணை – அரிய செய்தி – 29
புலையன்
மலையன் மாவூர்ந்து போகிப் புலையன்
பெருந்துடி கறங்க …………….
கபிலர். நற் 77 : 1.2.

மலையன் நாடு – மலாடு என்றானது என்பர்- மலாடர் கோமான். மலையன் சோழனுக்காகப் போர்மேற் சென்றான்; புலையனாகிய துடியன் பெரிய துடியை முழக்க….( புலையன் – புலால் உண்பவன் புலையனாகிய துடியன் – போர்க்களத்தே பெருந்துடி கொட்டி முழக்கிப் படை மறவரைப் போர்க்களத்தே ஊக்குவது பண்டைய போர்முறை.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக