செவ்வாய், 8 செப்டம்பர், 2015

நற்றிணை – அரிய செய்தி – 42 - 44

நற்றிணை – அரிய செய்தி – 42 - 44
உடல் மொழி
சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி
மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி
மறுகில் பெண்டிர் அம்பல் தூற்ற
உலோச்சனார். நற். 149 : 1 – 3
 தலைவியின் களவொழுக்கம் குறித்து ஊரார் குரிப்பால் அலர் தூற்றினர்.; வாயால் எதுவும் கூறாது.தெருக்களில் சிலராகவும் பலராகவும் கூடி நின்று கடைக்கண்ணால் குறித்துக் காட்டியும் சுட்டு விரலை மூக்கில் வைத்தும் பழிச் சொல் கூறுவாராயினர்.

நற்றிணை – அரிய செய்தி – 43
உயிர் தங்கிற்று
உண்டல் அளித்து என் உடம்பே
தனிமகனார்.நற். 153 : 7
பிரிவிடை மெலிந்த தலைவி – உயிரற்றது போல் தன் உடம்பு தனிமைப் பட்டதை நினைந்து; உயிர் வாழும் அளவே உண்ணுதலால் அவ்வுயிர் உடலில் தங்கிற்று என்றனள்.
நற்றிணை – அரிய செய்தி – 44
ஒப்பிடுக
 இருங்கண் ஞாலத்து ஈண்டு தொழில் உதவிப்
பெரும் பெயல் பொழிந்த …………….
இளவேட்டனார். நற். 157 : 1 – 2
 பெரிய இடமகன்ற இவ்வுலகில் உலக உயிர்கள் எல்லாம் தழைக்கும்படி யாக மழைத் தொழிலை உதவிப் பெரிய நீர்ப்பொழிவு பொழிந்தது.
 வானின்று உலகம் வழங்கி வருதலால்
 தானமிழ்தம் என்றுணரற் பாற்று – குறள்.11.

உலகம் என்றது ஈண்டு உயிர்களை அவை நிலைபெற்று வருதலால்’ உலகத்தை நிலைபெறுத்துகின்ற வானை அமிழ்தம் என்று உணர்க என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக