சனி, 9 ஜூன், 2018

திருக்குறள் -சிறப்புரை :901


91. பெண்வழிச் சேறல்
திருக்குறள் -சிறப்புரை :901
மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்
வேண்டாப் பொருளும் அது. – ௯0௧
மனைவியிடத்து மிகுந்த காம இச்சைகொண்டு, அவள் விருப்பத்திற்கிணங்க நடக்கின்றவர் வாழ்வில் பெருமை அடைய மாட்டார். கடமையிற் சிறந்தோர் விரும்பாத பொருளும் அதுவே.
“ நீர் ஓரன்ன சாயல்
தீ ஓரன்ன உரன் அவித்தன்றே.” ---குறுந்தொகை.
தலைவியின் நீரை ஒத்த சாயல், என்னுடைய தீயை ஒத்த மன வலிமையை அவித்து விட்டது. –தலைவன்.

1 கருத்து:

  1. வினை விழைவார் வேண்டாத பொருள் மனை விழையாமை என்பதை இரு வாக்கியங்களில் வழங்கப்பட்டுள்ளது இது குறளில் மனைவிழையாமையைப் பற்றிய கருத்துரையாக அளிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் குறுந்தொகை பாடல் பகுதி ஒரே வாக்கியம். தலைவியின் நீரை ஒத்த சாயல் தலைவனின் உரனை வலுவிழக்கச் செய்தது. எழுவாய் செயப்படுபொருள் வினை என்ற அமைப்பைக்கொண்டுள்ளது. இதுவும் கருத்துரையாக அமைந்திருந்தாலும் கருத்தை சொற்சுருக்கத்துடன் விளக்கி உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும் தன்மையைக் கொண்டுள்ளது.

    சொற்பயன்பாட்டை அளவுகோளாகக் கொண்டு நோக்கினால் குறட்பா குறுந்தொகைக்கு பிந்தியது போல் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு