வியாழன், 24 ஏப்ரல், 2025

தமிழமுது -10. - தாய்மொழி வழிக் கல்வி. அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா- 1935 – 2017.

 

தமிழமுது -10.   - தாய்மொழி வழிக் கல்வி.

அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா- 1935 – 2017.

தாய்மொழியில் பயிற்று மொழிச் சிக்கலுக்கு மிகப் பெரும்பான்மையான கல்வியாளர்கள் கூறும் காரணம் அறிவியலைத் தமிழில் பயிற்றுவிக்க முடியுமா..? என்பதுதான்.

 இவ்வினாவை எழுப்புவோர் தமிழர்களே, இவர்களின் இயலாமைக்கு மொழிமீது பழிபோடுவது அழகன்று, இவர்களுக்கு அறிஞர் மணவை முஸ்தபா கூறுவதாவது…..

 “ அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு எல்லா வகையிலும் ஆக்கம் தேடும் வகையில் மேற்கில் வெளியாகும் அறிவியல் நுட்பச் செய்திகளை உடனுக்குடன் தமிழில் தரும் அரிய வாய்ப்பை கூரியர் இதழ்வழி யுனெஸ்கோ ஏற்படுத்தித் தந்துள்ளது. எத்தகைய அறிவியல் நுட்பக் கருத்தாயினும் சொற்செட்டோடும் பொருட்செறிவுடனும் தமிழில் கூற முடிவதற்கு யாருடைய திறமையும் காரணமல்ல எண்ணற்ற வேர்ச்சொற்களைக் கொண்ட தமிழ்மொழி இயல்பாகவே அறிவியல் மொழியாக அமைந்திருப்பதுதான்” என்கிறார்.

அறிஞர் வ.சுப. மாணிக்கம்: 1917 – 1989.

 இந்தியர்கள் தத்தம் தாய்மொழியோடு பிறமொழிகளையும் கற்க வேண்டும். குறிப்பாக நீண்டகால உறவுடைய ஆங்கிலத்தைத் தாய்மொழியின் புதுமை வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். “ஒரு மாணவனுக்கு மழலையர் பள்ளி முதல் பல்கலைக் கழகம் வரை தாய்மொழிதான் ஒரே பயிற்று மொழியாக இருப்பது இயற்கை” என்று கூறுகின்றார்.

……………….தொடரும்……………………………..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக