தமிழமுது -16
- சங்க இலக்கியச் சுவை.
காழகம், புட்டகம், நூல், தானை.
”அகலல்குலில்
காழகம் உடுத்திய பென்ணொருத்தி ”- கலித்தொகை :92.
போன்றோரைச் சங்க இலக்கியம் காட்டுகின்றது. சிலப்பதிகாரத்தில் வணிக பூதம்
காளகஞ் செறிந்த உடையினனாகக் காட்டுகின்றது, -22. 98.
காளகம்
சேர்ந்த உடை, காழகமூட்டப்பட்ட காரிருள் துணி என்ற எண்ணங்களை நோக்க, காழகம் கருத்த ஆடை
என்பதும், கருமை யூட்டப்படுதல் இதன் இயல்பு என்பதும் விளக்கமாகின்றது.
எனவே
முதலில் காளகத்தில் இருந்து வருவிக்கப்பட்டது காழகம் என்பதும் பின்னர் தமிழர் தம்
நுண்ணறிவினால் இதை உருவாக்கத் தொடங்கியிருக்க வேண்டும் என்பதும் ஈண்டு ந்ழும் எண்ணங்கள்.
புட்டகம்:
பரிபாடல் உரைக்கும் உடை இது.
“புட்டகம்
பொருந்துவ புனைகுவாரும்”- 12 . 17. என்ற பாடலடியில் காணும் புட்டகம் நீராடுவதற்கேற்ற
உடை என்றும் பொருளுடையது என்பர். பிற இலக்கியங்களில் இதனைப்பற்றிய எண்ணமில்லை.
நூல்:
பட்டு
எனப் பட்டாடையைக் குறித்தல் போன்று நூல், பஞ்சு, இழை என்று பருத்தியாடையைச் சுட்டும்
மரபும் தமிழரிடம் காணப்பட்டது.
“நுண்நூல் அகம் பொருந்தினள்” – அகநானூறு: 198.
என்றும் பாடலடியில் நூல் நுண்மையான நூலால் ஆகிய ஆடையைக் விளக்குவதாகும்.
பஞ்சாடை
பஞ்சி எனச் சிந்தாமணி, சூளாமணியில் காட்டப்படுகின்றது. இன்று இவ்விரண்டு சொற்களும்
வழக்கற, நூலினைக் குறித்த இழை என்ற சொல் உடையைச் சுட்டும் நிலையில் அமைகின்றது.
தானை :
உடையைக் குறிக்கும் இச்சொல் சங்கப் பாக்களில் இடம் பெறுகின்றது.
தாழ் தானை (கலித்தொகை:147.), அரிவையதுதானை, (பரிபாடல்: 11.), தாரும் தானையும்
(புறநானூறு: 276.), கொடுந்தானைக் கோட்டழகு, (நாலடியார். 131), நீலத்தானை, (சிலப்பதிகாரம்.16:204)
என்னுமிடங்களில்
மேலாடையாகக் காண்கிறோம். இவற்றால் இடையில் உடுத்தும் உடை, மேலாடை இரண்டையும் குறிக்கும்
பொதுச் சொல் இது என்பது விளங்குகிறது. தானை இன்று அடையுடன் இணைந்து மேலாடையைக் குறிக்கிறது. தானை என்ற
தனிச்சொல் ஆடையைக் குறித்தல் இன்றில்லை. இன்று போன்று அன்றும் முன்தானையையே குறிக்க
இதுவழங்கியதோ என்று தெரியவில்லை.
……………….தொடரும்……………………………..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக