புதன், 23 ஏப்ரல், 2025

தமிழமுது -9. - தாய்மொழி வழிக் கல்வி. சிலம்புச் செல்வர் ம.பொ.சி – 1906 – 1995.

 

தமிழமுது -9.   - தாய்மொழி வழிக் கல்வி.

சிலம்புச் செல்வர் ம.பொ.சி – 1906 – 1995.

”பொறியியல், நவீன மருத்துவம், வான சாத்திரம், புவியியல் போன்றவற்றை அறிவியல் கலைகள் என்று சொல்வது பொருந்தும். இந்த அறிவியல் கலைகளை எந்த மொழியாலும் கற்பிக்கவோ, கற்க முடியும். சுதந்திரமாகவுள்ள ஒவ்வொரு நாட்டிலும் விஞ்ஞானக் கலைகள் உள்பட அனைத்துப் பாடங்களும் அந்தந்த நாட்டு மொழியில்தான் பயிற்றுவிக்கப்படுகின்றன.

 சுதந்திர இந்தியாவின் கல்வி வளர்ச்சிக்கென இதுவரை பல்வேறு கல்விக்குழுக்கள் திட்டங்களை வகுத்தளித்துள்ளன. 1951இல் டாக்டர் ஏ.எல். முதலியார் கல்விக்குழு, தனது பரிந்துரைகளில் ஒன்றாக “ தாய்மொழியோ அல்லது தனது மொழியோதான் உயர்நிலைக் கல்வியில் பயிற்றுமொழியாக அமைய வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவில் பயிற்றுமொழிச் சிக்கல் மிகுந்த குழப்பத்தை  விளைவிக்கிறது. மாணவர்கள் கல்வியும் எதிர்காலமும் பாதிக்கப்பட்டுள்ளன என்றாலும் சுதந்திர இந்தியாவில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஆங்கிலப் பயிற்றுமொழிக் கல்வியால் சாதனைகளை இழந்ததோடு வேதனைகளை விலைகொடுத்து வாங்கியுள்ளோம் என்பதுதான் உண்மை. ஆங்கிலவழியில் படித்தால்தான் வேலை கிடைக்கும் அறிவு வளரும் என்ற “வெள்ளை மாயையிலிருந்து மக்கள் இன்னும் விடுபடவில்லை. படிப்பு ஒரு வேலைக்குரியது என்ற நிலையில் தாய்மொழியைப்பற்றி யாரும் கவலைப்படாமல் ஆங்கிலத்தோடு அழுது புரளுகின்றனர். மேலும் பண வருவாய் உடைய பதவிகளுக்குரிய படிப்புகள் யாவுமாங்கிலவழியில் இருப்பது இன்னுமொரு கொடுமை.ஆங்கிலத்தை ஒரு நூலக மொழியாக அறிவு வளர்ச்சிக்கும் உதவும் ஒரு கருவியாகப் பயன்படுத்துவது காலத்தின் தேவையே.” என்கிறார் ம.பொ.சி அவர்கள்.

……………….தொடரும்……………………………..

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக