ஞாயிறு, 6 ஏப்ரல், 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 191–அறிவியல் சிந்தனைகள்: இக்காலச் சிந்தனைகள்.அறிவியல் புரட்சி:

 


சான்றோர் வாய் (மைமொழி : 191–அறிவியல் சிந்தனைகள்: இக்காலச் சிந்தனைகள்.அறிவியல் புரட்சி:

 

 அறிவியல் புரட்சி:

அறிவியல் புரட்சி _-  முன்னைய பதிவுகளில் குறிப்பிட்டுள்ளேன், ஈண்டு மேலும்  அறிவியல் வளர்ச்சி குறித்துச் சிலசெய்திகளை நினைவூட்டலாகக் கொள்ளவும்.

 தற்கால அறிவியல் வளர்ச்சியின் முன்னோடிகள் – கோப்பர் நிக்கஸ், கலிலியோ, கெப்லர், நியூட்டன் முதலியோரைக் குறிப்பிடலாம்.

 தாலமி வகுத்த புவிமைய பிரபஞ்சக் கோட்பாடு – பூமியை மையமாகக்கொண்டு பிரபஞ்சத்தின்  பிற கோள்கள் இயங்குகின்றன என்றார். 16ஆம் நூற்றாண்டில் கோப்பர் நிக்கஸ் தாலமியின் கருத்தை மறுத்தார்.

 

கோப்பர் நிக்கஸ்: - 1474 – 1543. போலந்து நாட்டைச் சேர்ந்தவர். தாய் நாட்டில் வானியல் ஆய்வுக்கூடம் அமைத்தார். சூரியனை மையமாகக் கொண்டு இப்பிரபஞ்சம் இயங்குகிறது என்றார். பிற கோள்கள் சூரியனைச் சுற்றிவருகின்றன, பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றுகிறது என்றார். இவர் எழுதிய நூலின் பெயர் “புரட்சிகள்’ என்பதாகும். இவருடைய கருத்து சமயக் கருத்திற்கு எதிரானதாக இருந்தது அதனால் இவரின் ஆய்வு முடிவுகள் இவர் இறந்தபின்தான் வெளியாகின.

கலிலியோ: - 1564 – 1643.

இத்தாலிய வானியல் விஞ்ஞானி. தனது ஆய்வுரையை உரையாடலாக அமைத்திருந்தார். “இரு முக்கியமான அமைப்புக் கொள்கைகள் பற்றிய உரையாடல்” என்பது அந்நூலின் பெயர். கோப்பர் நிக்கஸின் கருதுகோள்களை நிரூபித்தவர். நியூட்டன் பிறந்த நாளில் கலிலியோ இறந்தார். தொலைநோக்குக் கருவியால் பல அறிவியல் கண்டுபிடிப்புகளை வழங்கினார். அதனால் , கலிலியோ சமயக் குர்றவாளியாகக் கருதப்பட்டார். சமய கூர்வாளுக்கு அஞ்சி அப்போதைக்குத் தன் கருத்தை மாற்றிக்கொண்டார்.

……………………………….தொடரும் …………………..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக