செவ்வாய், 15 ஏப்ரல், 2025

தமிழமுது -3. பஞ்ச கவ்விய பஞ்சாமிர்த முறை.

 

தமிழமுது -3.

பஞ்ச கவ்விய பஞ்சாமிர்த முறை.

அருள்மிகு சிதம்பரநாத முனிவர் இயற்றிய நடராச சதகம்;

250 ஆண்டுகளுக்கு முன்னர்த் தோன்றியது. ; தருமையாதீன வெளியீடு -1976.

பாடல் எண் – 52.

கிருதமொரு பங்குத்தி யிருபங்கு பயமூன்று

     கிருதநேர் கோசல மயம்

கிளர்குசைப் புனல்மூ வுழக்கிவை கலந்தே

     கேடிலீ சானாதியா

முருமமுறு சுரிதி தரும் பஞ்சகவ் வியமுறையி

     தோங்குமைந் தமுத மாக்கல்

ஒருநூ றரம்பையின் கனியதற் கிருதெங்கு

     கண்ட சர்க் கரையெண் பலந்

தருமூ வுழக்குமது நெய்யதின் இரட்டியிவை

     தானெலாம் ஒன்று படவே

சமைவதாம் எனவுமை யவட்குமறை யாகமஞ்

     சாற்றினாய் உலக முய்ய

திரிநயன புரதகன சின்மய பராபர

     சிவாநந்த அருள் நிதியமே

சிவசிதம் பரவாச சிவகாமி யுமை நேச

     செகதீச நடராசனே!”

 பஞ்சகவ்விய அளவு :-

நெய் பங்கு – 1.

தயிர்  பங்கு –2.

பால் பங்கு – 3 .

கோசலம் லங்கு –1.

கோமயம்  பங்கு –1.

தருப்பை நீர் உழக்கு – 3.

இவற்றைக் கலந்து ஈசான முதலாச் சொல்லும் மந்திரங்களான் அமைக்கப்பெறும்.

 பஞ்ச கவ்வியம் :- பசுவினின்று உண்டாகும் பால், தயிர், நெய், மூத்திரம், சாணம், ஆகியவற்றின் கலவை. _தமிழ்ப் பேரகராதி.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக