ஞாயிறு, 4 ஜனவரி, 2026

தமிழமுது –175– தொல்தமிழர் இசை மரபு: .......தமிழிசை ஆய்வறிஞர் ஆபிரகாம் பண்டிதர்.

 தமிழமுது –175– தொல்தமிழர் இசை மரபு: 

                       சான்றோர் ஆய்வுரை – 34 

 தமிழிசை ஆய்வறிஞர் ஆபிரகாம் பண்டிதர். 

இராகம்,சுரம்சுருதி. ஆய்வுரை. 

ுத்தமிழ் :- இயல்இசைநாடகம் மூவகைத் தமிழ், 

இயற்றமிழ் :எழுத்துசொல்பொருள்யாப்புஅணி இலக்கணங்களும் இலக்கியங்களும். 

இசைத்தமிழ்:-சுரம்சுருதிஇராகம் என்னும் மூன்றின் இலக்கணங்களும் பன்னீராயிரம் ஆதி இசைகளும்.. 

டகத் தமிழ் :-தாளம்பாவனைஅலங்காரம்இரசம் எனும் நான்கு அங்கங்களை உடையது. 

 இசை :- பண்பண்சுரம்காமரப் பாட்டுகானம்கொளைவரிகந்திருவம்கீதம்இராகம்கேயம்,  நாதம் எனவும் அழைக்கப்பெறும். 

 ஏழிசை :- குரல்துத்தம்கைக்கிளைஉழைஇளிவிளரிதாரம் என்று பூர்வ தமிழ்மக்களால் வழங்கப்பட்டன அவற்றுள், 

 குல் :- முதல் சுரம (ச) ்சமம் ன்றும் 

 துத்தம்:- இரண்டாம் சுரம் (ரிரிஷபம் என்றும் 

 கைக்கிளை:- மூன்றாம் சுரம் (க) காந்தாரம் என்றும் 

 உழை :- நான்காம் சுரம் (ம) மத்திமம் என்றும் 

 இளி :- ஐந்தாம் சுரம் (ப) பஞ்சமம் என்றும் 

 விளரி :-ஆறாம் சுரம் (த) தைவதம் என்றும் 

 தாரம்:- ஏழாம் சுரம் (நிநிஷாதம் என்றும் தற்காலத்தில் வழங்குவர் 

 ஏழிசை பிறக்கும் இடம் :- மிடற்றால் குரல்நாவினால் துத்தம், அண்ணத்தால் கைக்கிளை, சிரத்தால் உழைநெஞ்சால் விளரிமூக்கால் தாரம் பிறக்கும். 

 ஏழிசை தம்மில் பிறப்பதற்குத் தகுதி :- தாரத்து உழை , உழையில் குரல்குரலில் இளிஇளியுள் துத்தம்துத்தத்துள் ிளரிவிளரியுள் கைக்கிளையும் பிறப்பது தகுதி சட்சமத்தின் ஓசை ஒன்றானால்பஞ்சமத்தின் ஓசை ஒன்றரையாய் வருவதால் இரண்டு ஓசையும் ஒன்றுபோல் பொருத்தமுடைய ஓசையாய் வரும். பஞ்சமத்தை சட்சமமாக வைத்துக்கொண்டு அதற்கு மேல் பொருந்தும் ஓசையாய்ப் பஞ்சமத்தைக் கண்டுபிடித்து மற்றும் சுரங்கள் யாவும் இம்முறையே பிறப்பதற்குக் காரணமாய் இருப்பதாலும் ப-ம வைப்போல் மற்றும்  குறைந்த பொருத்தமுடையவைகளாய்  இருப்பதாலும்  பஞ்சமமத்திமமுறையைச் சுரங்கள் பிறப்பதற்குத் தகுதியான முறையென்று சொன்னர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக