திங்கள், 12 ஜனவரி, 2026

தமிழமுது –182– தொல்தமிழர் இசை மரபு:42. ..........தொல்காப்பியம் : ஆய்வுரை :- கலை வளர்ச்சி:

 தமிழமுது –182– தொல்தமிழர் இசை மரபு:42. 

தமிழ் கூறும் நல்லுகத்துப் பேராசான் - தொல்காப்பியர். 

      தொல்காப்பியம் : ஆய்வுரை :- கலை வளர்ச்சி: 

                      பொருநர் என்பவர். மற்றொரு பிரிவினர்இவர்களிலே ஏர்க்களம் பாடுவோர்போர்க்களம் பாடுவோர்பரணி பாடுவோர் எனப் பலவகையினர் உண்டு என்று நச்சினார்க்கினியர் கூறுகின்றார்.ஏர்க்களம் பாடுதல்ஏருழுது விளைந்த தானியத்தைக் குவிக்கும் இடத்தையும் அவ்விடத்திற்குரிய வணிகர்வேளாளர் , குறுநில மன்னர்  போன்றோரையும் புகழ்ந்து பாடுதல்போர்க்களம் பாடுதல் , போர்க்களத்தைப் புகழ்ந்து பாடுதபரணி பாடுதல் வெற்றி பெற்ற அரசனுடைய பெருமையைச் சிறப்பித்துப் பாடுதல்இவ்வாறு பிறரை ஏற்றிப் புகழ்ந்து வாழ்க்கை நடத்துவோர்க்குப் பொருநர் என்று பெயர். 

                         இவர்களைச் சேர்ந்த பெண்களுக்கு விறலியர் என்று பெயர் விறல் - வெற்றி ; திறமைஇசை நடனம் முதலியவைகளிலே திறமையுடயவர்கள்கூத்தர்பாணர்பொருநர்விறலியர் ஆகிய இவர்கள் அனைவரும் ப்ரே வகுப்பினராகவும் இருக்கலாம்ஒரு வகுப்பைச் சேர்ந்தவர்களிலே சிலர் கூத்துப் பழகியவர்கள் சிலர் யாழ் போன்ற இசைக் கருவிகள் வாசிப்பதிலே வல்லவர்கள் ; சிலர் போர்க்களம்ஏர்க்களம்பரணி  பாடுவதிலே சிறந்தவர்கள்இவ்வாறு இருந்திருக்கலாம்இவர்களுக்குச் சாதிப் பாகுபாடு இல்லை என்று கூறுகிறார் நச்சினார்க்கினியர்இத்தகைய இசைக்கலைநாடகக்கலையைத் தொழிலாகக் கொண்ட ஒரு வகுப்பினர் தொல்காப்பியர் காலத்திலேயே தமிழ் நாட்டில் வாழ்ந்தனர் 

கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் 

ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்  

பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீச்  

சென்று பயன் எதிரச் சொன்ன பக்கமும்.” (தொல்.பொ.புற.30) 

 

                         ஆடுவதிலே தேர்ந்த கூத்தரும் பாடுவதிலே சிறந்த பாணரும் புகழ் கூறுவதில வல்ல பொருநரும்எல்லவற்றிலும் தேர்ந்த விறலியும் ஆகிய இந்த நால்வரும்வழியிலே தம் கண்ணெதிரே தோன்றிய வறியோர்க்கு தாம் யாரிடத்திலே  செல்வம் பெற்றோம் என்பதைக்கூறி அவரிடத்திலே சென்று செல்வம் பெறும்படி கூறிய பகுதியும் என்பதே இந்நூற்பாவின் பொருள்.  இதனால் இசைக்கலைநாடகக்கலை நடனக்கலை வளர்ச்சியைக் காணலம். 

நாடக வழக்கினும் .........................  

.........................................தொடரும்........................................ 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக