தமிழமுது –177 – தொல்தமிழர் இசை மரபு:
சான்றோர் ஆய்வுரை – 37
தமிழிசை ஆய்வறிஞர் ஆபிரகாம் பண்டிதர்.
இராகம்,சுரம், சுருதி. ஆய்வுரை.
செம்பாலைப்பண்: குரலே குரலாக அதாவது, ச -வே, ச - வாக ஆரம்பித்துப் பாடப்படுவது ; இதுவே தீரசங்கராபரணம்.
படுமைலைப்பாலைப்பண் : துத்தம் குரலாக அதாவது ரிஷபம் சட்சமமாகக் கிரககமாற்றிப் பாடுவது ; இதுவே கரகரப்பிரியா.
செவ்வழிப்பாலைப்பண்: கைக்கிளை குரலாக அதாவது காந்தாரம் சட்சமமாக வைத்துக் கிரகசுர மாற்றிச் சொல்வது ; இதனைத் தோடி என்பர்.
அரும்பாலைப்பண் : உழை குரலாக அதாவது மத்திமம் சட்சமமாக வைத்துப் பாடுவது ; இது கல்யாணி என்று பெயர் பெறும்.
கோடிப்பாலைப்பண் : இளி குரலாக அதாவது பஞ்சமம் சட்சமமாக வைத்துப் பாடுவது ; இதற்கு அரிகாம்போதி என்று பெயர்.
விளரிப்பாலைப்பண் : விளரி குரலாக அதாவது தைவதம் சட்சமமாகப் பாடப்படுவது ; இதுவே பைரவியாம்.
மேற்செம்பாலைப்பண் : தாரம் குரலாக அதாவது நிஷாதம் சட்சமமாக ஆரம்பித்துப்பாடுவது ; இதனை சுத்ததோடி என்பர் இவை ஏழும் ஆயப்பாலையில் வரும் ஏழு பெரும்பாலைகளாம்.
வலிது : மேல் சுரமுடையது ; செம்பாலைக்குப் படுமலைப்பாலை
வலிது. அதாவது ச - வில் தொடங்கும் செம்பாலைக்கு ரி-யில் தொடங்கும் படுமலைப்பாலை மேல் சுரத்தைக் கொண்டு ஆரம்பிப்பதால் வலிதென்றார். இதைப்போலவே மற்றைப்பாலைகளும் ஒன்று ஒன்று மற்றொன்றினும் வலிதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக