திங்கள், 19 ஜனவரி, 2026

தமிழமுது –185– தொல்தமிழர் இசை மரபு:45 . ...தொல்காப்பியர் கூறும் பாட்டு:

 தமிழமுது –185– தொல்தமிழர் இசை மரபு:45   . 

தமிழ் கூறும் நல்லுகத்துப் பேராசான் - தொல்காப்பியர். 

தொல்காப்பியர் கூறும் பாட்டு: 

 

    தொல்காப்பியர் பாட்டு , உரை என்று சொல்வதனால் பாட்டு இசையுடன் கூடியது எனலாம். 

இசை முறையாவது 

அகவலென்பது ஆசிரியம்மே 

 - அகவல் என் ஓசை ஆசிரியப் பாவிற்குரியது. 

அஃது ஆன்று என்ப வெண்பா யாப்பே”  

வெண்பாவிற்குரிய ஓசை அகவலோசையன்றுசெப்பலோசை என்பர்   

 “துள்ளல்் ஓசை கலியென மொழிப”-1340.  

கலிப்பாவிற்குத் துள்ளல் ஓசை என்று கூறுவர்.   

 “துங்கல் ஓசை ஞ்சியாகும்.”  

 

வஞ்சிப்பாவிற்குத்  தூங்கல் ஓசை என்பர் 

  “மருட்பா ஏனை இருசார் அல்லது   

தான் இது என்னும் தனிநிலை இன்றே 

மருட்பாவிற்கு ஓசை இது என்னும் தன்மை இல்லைஆசிரியம்வெண்பாவிற்குரிய ஓசையே அதற்கு ஓசையாகும்.  பா வகை:-  

  “ ஆசிரியம் வஞ்சிவெண்பா கலி என  

 நால் இயற்று என்ப பாவகை விரியே“ -  

ஆசிரியப்பாவஞ்சிப்பாவெண்பாகலிப்பா எனப் பாக்கள் நான்கு வகையில் இயற்றப் பெறும் என்று கூறுவர்,  

 ால்வகை - இருவகையுள்:-   

பாவிரி மருங்கினைப் பண்புறத் தொகுப்பின்  

ஆசிரியப்பா வெண்பா என்றாங்கு  

ஆயிரு பாவினுள் அடங்கும் என்ப - 1364. மேற்கூறிய ஆசிரியம்வஞ்சிவெண்பாகலிப்பா என்ற நான்கும் ஆசிரியப்பாவெண்பா ஆகிய இரு பா வகைகளுள் அடங்கும் என்று கூறுவர். 

பரிபாட்டு :-   

“ பரிபாடலே தொகை நிலை வகையின் 

இது பா என்னும் இயல்நெறி இன்றிப்  

பொதுவாய் நிற்றற்கும் உரித்தென மொழிப “ -1377.  

பரிபாடல் என்பது தொகுத்துக் காணும் வகையில்இன்ன பா என்று சொல்லப்படும் இலக்கமின்றிஎல்லாப் பாவிற்கும் பொதுவாய் நிற்றற்கும் உரியது என்று கூறுவர். பரிபாடலின் உறுப்புகள்: -    

 கொச்சகம் அராகம் சுரிதகம் எருத்தொடு 

 செப்பிய நான்கும் தனக்கு உறுப்பாகக்  

காமங் கண்ணிய நிலைமைத் தாகும்.” - 1378. 

  பரிபாடல் கொச்சகம் ,அராகம்சுரிதகம்எருத்தென்ற தரவுடன் கூறப் பெற்ற நான்கினையும் தனக்கு உறுப்பாகக் கொண்டு அகத்திணைப் பொருளில் வரும். 

 தொல்காப்பியர் பாக்களுக்கு அகஇலக்கண வரைமுறைகளை வகுத்ததோடு புறக்கூறாகப் பாக்களுக்கு உரிய அடி அளவுகளையும் விரித்துரைத்துள்ளார். 

இவற்றுள் கலிப்பாவும்பரிபாட்டும் பாடல் சான்றவை என்பதைக் காணலாம். 

 

.........................................தொடரும்........................................ 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக