திங்கள், 27 ஏப்ரல், 2026

தமிழமுது –276– தொல்தமிழர் இசை மரபு:136. ..பண் சுமந்த பாடல்.

 தமிழமுது –276– தொல்தமிழர் இசை மரபு:136. நீட்சியும் -  வீழ்ச்சியும்ஆடல் + பாடல் = கூத்து (நாடகம்) 

இசைமரபு - எழுச்சிபண்சுமந்த பாடல்கள். 

       மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்:  பண் சுமந்த பாடல். 

தமிழில் பொருள் இல்லாத சொல் கிடையாது என்பார் தொல்காப்பியர்அனைத்து சொற்களுக்கும் பொருள் உண்டு.அப்படி பொருள் இல்லாத சொல் ஒன்று உங்களுக்கு அறிமுகமானால் உங்களுக்கு அந்த வார்த்தைக்குப் பொருள் தெரியவில்லை என்று உங்களை நீங்களே தலையில் கொட்டிக் கொள்ள வேண்டும். 

 

இரண்டாவதாக தமிழ் சொற்களை நீங்கள் பிரித்துப பொருள் கொள்ளலாம்.உதாரணமாக கடவுள் என்ற வார்த்தையை கட + உள் எனப் பிரித்து அதற்கு அறிஞர்கள் விளக்கமாக பதில் சொல்வார்கள்.பிரித்துப் பொருள் அறியும் சொற்கள் பகுபதச் சொற்கள் என்றும் பிரிக்காமல் பொருள் தரக்கூடிய சொற்கள் பகாபதம் எனவும் சொல்லப்படும்.ஆனால் ஆங்கிலத்தில் God என்பதை நீங்கள் எப்படி பிரிப்பீர்கள்...?வெறும் ஒலிச் சத்தம் மட்டும்தான். 

 

மூன்றாவது தமிழின் உச்சரிப்பில் ஒரு கட்டுக்கோப்பான இசைக்கட்டு இயற்கையாகவே இருக்கும்.தவறில்லாது தமிழில் பேசக்கேட்பதே ஆனந்தமாக இருக்கும் .அந்த அழகிய தமிழ் நடையை வைத்தே தமிழ்நாட்டு அரசியலை கை பிடித்த தலைவர்கள் கதை நமக்கு தெரியும். 

எழுத்து , சீர் , தளை , தொடை , எதுகை , மோனை என்னும் இலக்கணக் கட்டுக்குள் இருக்கும் தமிழின் செய்யுள்கள் ,பாயிரங்கள் எப்படி இருக்கும்...? அப்படியாகப்பட்டப் பதிகங்கள் அருளாளர்கள் வழியே வெளிப்படு மானால் அதன் இனிமை , உயர்வு , மகிமை ,...இவற்றை நமது வெற்று வார்த்தைகளால் வர்ணித்துச் சொல்லி விட முடியுமா...? 

மாணிக்கவாசகரின் திருவாசகம் திருஅம்மானை யில் இருந்து ஒரு பாடல்....படிப்பதற்கு எவ்வளவு எளிமை... 

 

பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும் 

பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான் 

விண்சுமந்த கீர்த்தி வியன்மண் டலத்தீசன் 

கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை 

மண்சுமந்து கூலிகொண்டு அக்கோவால் மொத்துண்டு 

புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய் 

திருவாசகம் - திரு அம்மானை. ) 

 

இந்தப் பாடலின் எளிமையைப் பாருங்கள்.நம்மைப் போன்றோர் மீது பெரும் இரக்கம் கொண்டு மணிவாசகர் பாடிய மிக எளிய பாடல்சிவம் வந்திக்கிழவிக்காக மண் சுமந்த கதை நமக்குத் தெரியும்.இங்கு மணி வாசகர் சிவம் சக்தியை தம் உடலில் இடப்பாகத்தில் சுமந்தவன் , விண் சுமந்த கீர்த்தி கொண்டவன் , கண் சுமந்த நெற்றி கொண்டவன் , மண் சுமந்தவன் , அடிபட்டு முதுகில் புண் சுமந்தவன் என சிவத்தை எப்படி எப்படியெல்லாம் அடுக்கு மொழி அழகுத் தமிழில் வர்ணிக்கிறார் பாருங்கள். 

இதுபோல பாடினால் என்னதான் தரமாட்டான் சிவம்...?அதற்கும் மணிவாசகர் முதல் வரியில் சொல்லிவிட்டார். " பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும் " இசை அழகு கூடிய தமிழ் பாடல் பாடுபவர்க்கு பேரருள் அருளும் வள்ளல் அவன் என்கிறார். 

பண்சுமக்கும் பாடலை எழுத நமக்குக் கொடுப்பினை இல்லை என்றாலும் பண் சுமக்கும் பாடல்களை நமக்கு அருளாளர்கள் எத்தனை எத்தனையோ அருளிச் சென்றுள்ளார்கள்அவற்றை நாம் பாடி சிவத்தின் அருளைப் பெறலாம் அல்லவா...? 

கி.காமராஜ்.  

கடவுள் நம்பிக்கை இல்லாத அறிஞர்களையும் திருவாசகம் தனது தமிழ்ச்சுவையால் பிணைத்துள்ளது.  

புற்றில் வாழ் அரவும் அஞ்சேன் “, யாமார்க்கும் குடியல்லோம் ; நமனை ஆஞ்சோம் “ போன்ற திருவாசகத் தொடர்கள் அவர்கள் நாவிலும் நர்த்தனம் புரிவதை அறிகிறோம்,  தண்ணார் தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாட்டானை.” (திரு அம்மானைஎன்று பாடியுள்ளமை கற்போர் உள்ளத்தில் கழிபேருவகை பயப்பிக்கும். “இறையனார் அகப்பொருள்’ என்னும் இலக்கண நூலினைச் சிவபெருமான் இயற்றித்தந்துள்ள கருணையினை நினைவுகூர்ந்து அப்பெருமானைத்  தண்ணார் தமிழளிக்கும் தண்பாண்டி நாட்டான்என்று போற்றுகின்றது திருவாசகம். தண்ணார்  தமிழ் என்பது -குளிர்ச்சி நிறைந்த தமிழ் என்று பொருள்படும்.அகத்திணை இலக்கியமானது உள்ளத்தில் எழக்கூடிய வெகுளி முதலிய வெம்மை நிறைந்த பண்புகளைத் தணித்து அன்புஅருள் ஆகிய குளிர்ச்சி நிறைந்த பண்புகளை மேலோங்கச்செய்யும்சிவபெருமான் இயற்றி வழங்கிய அத்தகைய ‘அகப்பொருள்’ நூலாகலின் அதனைத் ’தண்ணார் தமிழ்’ என்று திருவாசகம் போற்றியுரைக்கின்றது. 

ஆகம உபதேசத்தால் மெய்ப்பொருளை உணர்ந்து மீண்டும் பிறவிக்கு வராமல் மணிவாசகர் வீடு பேறு பெற்றமையினைகுறிப்பிடுகின்றார். 

“ எல்லாப் பிறப்பும் பிறந்திளைந்தேன் எம்பெருமான்    

மெய்யே உன் பொன்னடிகள்   கண்டின்று வீடுற்றேன்.” (சிவ புராணம்.) --சிவஞான சுவாமிகள் அடிப்பொடி சுகுஞ்சிதபாதம்.................................................. தொடரும்......................................... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக