செவ்வாய், 12 செப்டம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 649

திருக்குறள் – சிறப்புரை : 649
பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லால் தேற்றா தவர்.--- ௬௪௯
வெல்லும் சொல் இன்மை அறிந்து, சில சொற்களால் தம் கருத்தை எடுத்துரைக்கத் தெரியாதவர்கள், பொருள் பொருந்தாத பற்பல சொற்களைக் கூட்டி உரைப்பதை விரும்புவார்கள்.
“கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று.—குறள்.402.

கல்வியறிவு இல்லாத ஒருவன் கற்றோர்முன் உரையாற்ற ஆசைப்படுவது, முலை இரண்டும் இல்லாத பெண் ஒருத்தி, காம இன்பத்தை விரும்பியது போலாகும்.

1 கருத்து: