சனி, 4 மே, 2019

திருக்குறள் -சிறப்புரை :1238


திருக்குறள் -சிறப்புரை :1238

முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல். ----- ௨௩ ௮

தலைவியை அணைத்து முயங்கிய கைகள் சிறிது விலகிய பொழுதே, வளையல் அணிந்த இப்பேதையின் ஒளி பொருந்திய நெற்றியில் பசலையூர்ந்தது.

மன்ற மராஅத்த பேஎம்முதிர்கடவுள்
கொடியோர்த் தெறூஉம் என்ப யாவதும்
கொடியர் அல்லர் எம் குன்றுகெழு நாடர்
பசைஇப் பசந்தன்று நுதலே
நெகிழ ஞெகிழ்ந்தன்று தடமென் தோளே.—குறுந்தொகை.

ஊர்மன்றத்தில் உள்ள கடம்ப மரத்தில் உறைகின்ற, அச்சமூட்டும் பழமை வாய்ந்த கடவுள், கொடுமையுடையாரைக் கொல்லும் என்பர். குன்றுகள் பொருந்திய நாட்டின், எம் தலைவர் சிறிதும் கொடுமை உடையரல்லர். அவர் எம்மைப் பிரியலாகாது என்பதற்காக என்னுடைய நுதல் பசலை பூத்தது ; பிரிந்தால் உள்ளம் நெகிழும் என்பதைக் காட்டுவதற்காக என்னுடைய பெரிய தோள்கள் மெலிந்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக