வெள்ளி, 24 மே, 2019

திருக்குறள் -சிறப்புரை :1277


திருக்குறள் -சிறப்புரை :1277

தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை. ---- ௨ ௭ ௭

குளிர்ந்த நீர்த்துறையினை உடைய தலைவன்,  புணர்ந்து மகிழ்ந்து, பின்னர்ப் பிரிந்து செல்வான் என்பதை  நம்மைவிட, நம் கை வளையல்கள் முன்னரே உணர்ந்துகொண்டனவே.

ஆய்மலர் மழைக்கண் தெண்பனி யுறைப்பவும்
வேய்மருள் பணைத் தோள் விறலிழை நெகிழவும்
அம்பன் மூதூர் அரவமாயினும்.” ----நற்றிணை.

 அழகிய குவளை மலர் போன்ற குளிர்ச்சியை உடைய நின் கண்களிலிருந்து தெளிந்த நீர் மிகவடிந்து விழவும், மூங்கிலை ஒத்த பருத்த தோள் அணிந்த ஏனைய கலன்களை வெற்றி கொள்ளும் வளை நெகிழ்ந்து விழவும், அவற்றை நோக்கிப் பழி கூறும் இவ்வூர் அலர் தூற்றவும் ஆயினும் …!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக